103வது பிறந்த நாள்: பாபு ஜெகஜீவன் ராமுக்கு தலைவர்கள் அஞ்சலி
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சுதந்திர போராட்ட வீரரும், முன்னாள் துணை பிரதமருமான மறைந்த பாபு ஜெகஜீவன் ராமின் 103வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
டெல்லியில் உள்ள அவரது சமாதியில் பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, லோக்சபா சபாநாயகரும், ஜெகஜீவன் ராமின் மகளுமான மீரா குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில் பாபுஜியின் சமாதியான சாம்தா ஸ்தலத்தில் அனைத்து மத பிரார்த்தனைகள் மற்றும் செங்கோட்டை வரை ஷோபா யாத்ரா ஆகியவையும் நடத்தப்பட்டது.
விஞ்ஞான் பவனில் இன்று மாலை பாபு ஜெகஜீவன் ராம் நினைவு சொற்பொழிவை நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி நிகழ்த்த உள்ளார்.












Click it and Unblock the Notifications