மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் பெயர் சென்னை என மாற்றப்படுகிறது

முன்பு தமிழ்நாடு, 'மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்டது. அதை அறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் மாற்றினார்.
அதேபோல கடந்த திமுக ஆட்சியின்போது மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என மாற்றி உத்தரவிட்டார் முதல்வர் கருணாநிதி. இதையடுத்து மெட்ராஸ் என்று ஆங்கிலத்தில் எழுதி வந்த நிலை மாறி தற்போது சென்னை என்றே தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்படுகிறது.
அதேசமயம் சென்னை பல்கலைக்கழகம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றின் பெயரில் இன்னும் மெட்ராஸ் என்றே நீடிக்கிறது.
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பதை மாற்றி, சென்னை சென்னை உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்பட வேண்டும் என்பது குறித்து முதல்வர் கருணாநிதியும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில்,சென்னை உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்வது குறித்த கோரிக்கை தீவிர பரிசீலனையில் இருப்பதாக மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை தெரிவித்து உள்ளது.
சென்னை தவிர,
இதேபோல் பாம்பே, கல்கத்தா, கெளஹாத்தி ஆகிய பெயர்களில் உள்ள அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களின் பெயர்களையும் இத்துடன் சேர்த்து மாற்ற (மும்பை, கொல்கத்தா, குவஹாத்தி) மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்தந்த மாநில அரசுகளுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அவை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறப்படும்.
இதன் அடிப்படையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு அது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications