நெல்லையப்பருக்கு நாளை அதிருத்ராபிஷேகம்
நெல்லை: நெல்லையப்பர் கோவிலில் நாளை சுவாமிக்கு அதிருத்ராபிஷேகம் நடக்கிறது. அம்பாளுக்கு இன்று கோடி அர்ச்சனை பூர்த்தியாகிறது.
தென்தமிழகத்தில் முதன்முறையாக நெல்லை நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு 25 ஆண்டுகளுக்கு பிறகு 30 லட்சம் செலவில் கோடி அர்ச்சனை வைபவம் கடந்த 2ம் தேதி துவங்கியது. 70 ஆச்சாரியார்கள் மூலம் தினந்தோரும் 5 லட்சம் அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில் கோடி அர்ச்சனை நடக்கிறது. இன்று 21ம் தேதி இரவுடன் பூர்த்தியாகிறது. 22ம் தேதி காந்திமதி அம்பாள் சன்னதியில் சகஸ்ரகலாசாபிஷேகம் நடக்கிறது.
1000 பெண்கள் அர்ச்சனை செய்தல், காந்திமதி அம்பாள் சன்னதியில் நாளை மாலை 5,30 மணிக்கு காந்திமதி மகளிர் கைகார்ய கமிட்டியினரின் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை, பராயாணம் நடக்கிறது. 22ம் தேதி மதியம் 12 மணிக்கு சாமி நெல்லையப்பருக்கு அதிருத்ர அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. 23ம் தேதி சாமி நெல்லையப்பருக்கு சகஸ்ரகலாசபிஷேகமும், மதியம் மகாதேவ பூஜையும் நடக்கிறது.
பூஜை பொருட்கள் வழங்க கோரிக்கை - அதிருத்ர பெருவேள்வி மற்றும் மகாபூர்ணாஹூதிக்கு தேவையான நெய், ஹோம சாமன்கள், உலர் பழங்கள், வாசனை திரவியங்கள், வஸ்திரங்கள் பக்தர்களிடம் இருந்து பெற தனி கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இதே போல் கோடி அர்ச்சனைக்கு தேவையான நயம் குங்குமத்தையும் பக்தர்கள் வழங்கலாம். மேலும் கோடி அர்ச்சனை, அதிருத்ர பெரு வேள்வியில் ரூ.4 செலுத்தி தங்கள் பெயர் நட்சத்திரத்திறகு அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications