அருவிக்கு அடிப்படை வசதி செய்ய பணகுடி பேரூராட்சிக்கு ரூ.1.11 கோடி
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஏழைகளின் குற்றாலம் என்று அழைக்கப்படும் குத்திரபாஞ்சான் அருவியை மேம்படுத்த பணகுடி பேரூராட்சிக்கு ரூ. 1.11 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ராதாபுரம் தாலுகா, பணகுடி பேரூராட்சி எல்லைக்குள் இந்த அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். மழைக் காலங்களில் அதிக அளவில் தண்ணீர் கொட்டும். இதனால் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதே போல் அதே பகுதியில் அமைந்துள்ள கன்னிமாரன் அருவிக்கும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இந்த பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அங்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தமிழக அரசுக்கு திட்ட விபரங்களை நெல்லை மாவட்ட கலெக்டர் அனுப்பினார். குத்திரபாஞ்சன் அருவிக்கு செல்லும் பாதையில் தார் சாலை அமைக்க ரூ.65 லட்சம், குத்திரபாஞ்சன் மற்றும் கன்னிமாரன் அருவி அருகில் உடை மாற்றும் அறை, கட்ட ரூ.14 லட்சம், ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறை கட்ட ரூ.26 லட்சம், கன்னிமாரன் அருவி அருகே படித்துறை அமைக்க ரூ.6.25 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியோ 11 லட்சத்து 25 ஆயிரம் ஓதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த பணிகளை பணகுடி தேர்வு நிலை பேரூராட்சி மூலமாக மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications