பொதிகை செய்திகள் நேரம் மாற்றப்படும்: அமைச்சர் தகவல்
சென்னை: தூர்தர்ஷன் சென்னை தொலைக்காட்சியின் பொதிகை செய்தி ஒளிபரப்பு நேரம் மாற்றி அமைக்கப்படும் என்று மத்திய தகவல்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் திடீர் ஆய்வு நடத்திய அவர் ஊழியர்கள் மத்தியில் பேசுகையில்,
அதிகம் பேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கக்கூடிய நேரத்தில், மக்கள் மிகவும் விரும்பிப் பார்க்கும் தொடர்களை தூர்தர்ஷன் ஒளிபரப்ப வேண்டும்.
தூர்தர்ஷன் தமது புதிய நிகழ்ச்சிகள் மற்றும் வித்தியாசமான புதிய முயற்சிகள் குறித்து செய்தித் தாள்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தூர்தர்ஷன் செய்திகளில் உள்ள துல்லியம், நடுநிலைமை, மிகவும் அண்மை நிகழ்வுகள் குறித்த தகவல்கள் போன்ற காரணங்களால் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது.
தினமும் இரவு 8.15 முதல் ஒளிபரப்பாகும் அரை மணி நேர பொதிகை செய்தியை, பொதுமக்கள் வசதிக்காக இனி 8.30 முதல் தொடங்கும் வகையில் நேரத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications