ஹரியானா பல்கலைக்கழகத்தில் 'சதி' கோயில்!

கணவன் இறந்ததும், அவனது எரியும் சிதையில் மனைவியும் விழுந்து எரிந்து உயிரை விடுவதுதான் உடன்கட்டை ஏறும் பழக்கம் அல்லது சதி எனப்படுகிறது.
நாடு விடுதலையாவதற்கு முன்புவரை இந்த மோசமான பழக்கம் வட இந்தியாவில் தலை விரித்தாடியது. ஆனால் ராஜாராம் மோகன் ராய், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்கள் இந்த கொடிய பழக்கத்தை அடியோடு ஒழித்தனர்.
ஆனால் இந்த நவீன காலத்திலும் எப்போதாவது ஒரு முறை இந்த உடன்கட்டை ஏறும் நிகழ்ச்சி வடக்கில் நடந்து வருகிறது.
கணவனுடன் மனைவியும் நேராக சொர்க்கத்துக்கே போவார்கள் என்ற நம்பிக்கை காரணமாக இதனை துணிந்து செய்கின்றனர் சிலர்.
இந்தச் செயல் ஒரு சமூக விரோத, சட்ட விரோத நிகழ்ச்சியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சதியைப் போற்றும் வகையில் ஹரியானாவில் உள்ள சவுத்ரி சரண்சிங் ஹரியானா வேளாண்மைக் கல்லூரி வளாகத்துக்குள் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
கணவனுடன் உடன்கட்டை ஏறிய ஒரு மனைவியைப் போற்றும் வகையில், இந்தக் கோயில் பத்தாண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்து. இந்த கோயிலை உள்ளடக்கிய இடத்தில்தான் பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. எனவே கோயிலை அமைத்தவர்கள் வழிபடும் உரிமை கோர, பல்கலைக் கழகமும் இதனை கடிதம் பெற்றுக் கொண்டு வழிபட அனுமதித்துள்ளது.
இப்போது, இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் பொதுமக்கள் வந்து வழிபடவும் ஆரம்பித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications