தமிழக கல்லூரி மாணவர்களுக்கு ரஷ்ய மொழிப்பயிற்சி- விரைவில் ஏற்பாடு

இந்திய, ரஷ்ய கலாசார மற்றும் நண்பர்கள் சங்க தலைவர் எழுத்தாளர் ஜெயகாந்தன், இந்தோ-ரஷ்யன் தொழில்வர்த்தக சபை செயலாளர் தங்கப்பன், மாஸ்கோ பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவர் அலெக்ஸ்சாண்டர் துபியாங்கி ஆகியோர் சென்னையில் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது இதுபற்றி அவர்கள் கூறுகையில், 'இந்திய, ரஷ்ய நட்புறவை மேம்படுத்தும் வகையில், தமிழ் மொழியை ரஷ்யர்கள் கற்கவும், ரஷ்ய மொழியை இங்குள்ளவர்கள் கற்கவும் ரஷ்ய அறிவியல் கலாச்சார மையம் ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் வாயிலாக கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழ் மொழியாக்கத்துடன் ரஷ்ய மொழியை எளிதில் கற்றுக்கொள்ளலாம். இந்த பாடங்கள் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடத்தப்படும்.
இதற்காக பல்கலைக்கழகங்கள், கல்லூரி நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். மேலும் மாணவர்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியாக இணையதளம் உருவாக்கப்படும். இதுபற்றிய மேலும் விவரங்கள் அதில் வெளியிடப்படும்.
இந்தியாவில் ரஷ்ய தொழிற்சாலைகள் இருக்கின்றன. எனவே ரஷ்ய மொழியை கற்பதால் கூடுதல் வேலைவாய்ப்பும் கிடைக்கும்' என்றனர்.












Click it and Unblock the Notifications