திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஜூலை 16ம் தேதி ஆழித் தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்ட விழா உலக புகழ்பெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்க ஆழித்தேரோட்டம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர விழாவின் நிறைவாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பங்குனி உத்திர கொடியேற்று விழா நிறைவாக ஆழித்தேர் செல்வதற்காக தியாகராஜசாமி தேவாசிரியர் மண்டபத்தில் எழுந்தருளினார்.
ஆனால் தேரோடும் 4 வீதிகளிலும் அமைக்கப்பட்டு வரும் சிமெண்டு சாலை பணி மற்றும் பல்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறுவது தாமதமானது. இதனால் தேவாசிரியர் மண்டபத்தில் தியாகராஜசாமிக்கு தினமும் பூஜை நடைபெற்று வந்தது. இதற்கிடையே ஆடிப்பூர விழா வருகிற ஜுலை 20-ந் தேதிக்கு மேல் நடைபெறுவதால் அதற்குள் ஆழித்தேரோட்டம் நடைபெற வேண்டும் என்பது ஐதீகம். எனவே, இந்த ஆண்டு ஆழித்தேரோட்டம் எப்போது நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
இந்த நிலையில்,தியாகராஜசாமி கோவிலில் அறநிலையத்துறை இணை ஆணையர் எம்.கவிதா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் ஜுலை 16-ந் தேதி நடத்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதற்குள் சிமெண்டு சாலைப் பணிகளை நிறைவேற்றி தருவதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது ரூ.5.85 லட்சம் மதிப்பில் ஆழித்தேர் சிறுபராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஆழித்தேர் முழுமையாக சீரமைக்கப்படும். இதற்காக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், ரூ.14.60 லட்சம் மதிப்பில் நவக்கிரக சன்னதி மேல் பகுதியில் இரும்பு கம்பியால் கூரை அமைக்கப்பட உள்ளது.
ரூ.9 லட்சம் மதிப்பில் கமலாலயக்குளத்தில் படகுத்துறை அமைக்கப்படுகிறது. ஆரூரான் திருமண மண்டபத்தை சீரமைக்க ரூ.45 லட்சம் வழங்க அரசிற்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications