திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு

அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் கந்த சஷ்டி விழா கடந்த 6-ம் தேதி துவங்கியது. இதையொட்டி கோயில் வளாகம் மற்றும் விடுதிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
4-ம் நாளான நேற்றுமுன்தினம் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. சுவாமி ஜெயந்திநாதர் சூரனை கடற்கரையில் வதம் செய்கிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்வர்.
நாளை காலை கோயிலில் இருந்து தெய்வாணை அம்மாள் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் மண்டபத்தில் சேருகிறார். பின்னர் மாலையில் ஜெயந்தி நாதர் முக்கிய வீதிகள் வழியாக தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சிக்கு புறப்படுகிறார்.
5-ம் சந்நதியில் சுவாமி அம்மனுக்கு தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
இதை காண வரும் பக்தர்களின் வசதிக்காக தென்னக ரயில்வே இன்று சிறப்பு ரயிலை இயக்குகிறது. அதன்படி நெல்லையில் இருந்து இன்று மதியம் 12.15 மணி, 2 மணி, மாலை 4.55 மற்றும் இரவு 9 மணிக்கு சிறப்பு ரயில்கள் திருச்செந்தூருக்கு புறப்பட்டுச் செல்கின்றன.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து இன்று காலை 9.20 மணி, பகல் 11.45, இரவு 9 மற்றும் 11 மணிக்கு சிறப்பு ரயில்கள் நெல்லைக்கு புறப்பட்டுச் செல்கின்றன.
பழனியிலும் இன்று சூரசம்ஹாரம்:
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியிலும் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
பழனியில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 6-ம் தேதி துவங்கியது. இதையொட்டி பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்து வருகின்றனர். விழாவின் ஆறாம் நாளான இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
இன்று மதியம் உச்சிக்கால பூஜை, சாயரட்சை பூஜை நடக்கிறது. இதைத் தொடர்ந்து சூரர்களை வதம் செய்ய மலைக்கொழுந்து அம்மனிடம் சின்னக்குமாரசாமி வேல் வாங்கும் விழா நடைபெறுகிறது. இதையடுத்து மதியம் 3 மணிக்கு நடை சாத்தப்பட்டு, சின்னக்குமாரசாமி அடிவாரம் வந்தடைகிறார்.
பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானையுடன் மயில்வாகனத்தில் அடிவாரம் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுகிறார்.
மாலை 5.30 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசூர வதமும், கிழக்கு கிரி வீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரி வீதியில் சிங்கமுகசூர வதமும், மேற்கு கிரி வீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறுகிறது.
இரவு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா கொண்டாடப்பட்டு, மலைக் கோயிலில் சம்ப்ரோட்சண பூஜையும், அர்த்தஜாம பூஜையும் நடக்கிறது. நாளை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications