தமிழ்நாடு ஹஜ் கமிட்டி புதிய தலைவராக அபூபக்கர் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் புதிய தலைவராக சென்னை பிரசிடென்ட் ஹோட்டல் உரிமையாளர் அபூபக்கர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கவிஞர் அப்துல் ரகுமான் தலைமையில் சென்னையில் நடந்தது.

கூட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் டி.என்.ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், சென்னை பிரசிடென்ட் ஓட்டல் அதிபர் அபூபக்கர் புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். புதிய உறுப்பினர்களும் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் பெயர் விவரம்:

ஜே.எம்.ஆரூண், எம்.பி, எஸ்.ஏ.எச். பசீர் அகமது (கீழக்கரை நகராட்சி தலைவர்), எஸ்.கே.கே.ஹக்கீம் (பழனி நகராட்சி துணைத்தலைவர்), என்.ஏ.சுலைமான் பாட்சா (அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர்), அஸ்கர் அலி தலா (சென்னை அஞ்சுமான்-இ-ஹூசைனி தலைவர்), பி.ஏ.காஜா முகைனுதீன் (பேராசிரியர், நெல்லை மேலப்பாளையம் உஸ்மானியா அரபி கல்லூரி), நவாப் ஜடா முகமது ஆசிப் அலி (ஆற்காடு இளவரசரின் மகன்), எச்.முகமது அப்சல் (கவுரவ செயலாளர், தமிழ்நாடு ஹஜ் பணி சங்கம், சென்னை), ஆரீப் (சென்னை பர்வீன் டிராவல்ஸ் இயக்குனர்), திருப்பூர் எம்.ஏ.சத்தார் (பொதுச்செயலாளர், தமிழ்நாடு மாநில காயிதே மில்லத் பேரவை), கவிஞர் அப்துல் ரகுமான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+