களி்மண்ணில் நகை வடிவமைப்பு பயிற்சி
ஆழ்வார்குறிச்சி: ஆழ்வார்குறி்ச்சியில் களிமண்ணில் கண்ணை கவரும் வகையில் வண்ண நகைகள் செய்வது குறித்து சிறப்பு பயிற்சி பட்டறை நடந்தது.
தற்போது களிமண்ணால் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர் பானை, சட்டி, விளக்கு, பூந்தோட்டி, சிறிய குவளைகள், அடுப்பு கட்டி என பல்வேறு பொருட்களை செய்து வருகின்றனர்.
இந்த மண்ணை கொண்டு வருவது, அதனை பொருட்களாக வடிவமைப்பது, பின்னர் வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வது என பல வேலைகள் இருப்பதால் மண்பாண்டம் செய்பவர்கள் மட்டுமே இந்த தொழிலை செய்ய முடியும் என்பதால் காலப்போக்கில் இந்த தொழில் நலிவடைந்து வருகிறது.
இந்த மண்பாண்ட தொழிலாளர்களின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசு சார்பில் பெண் தொழிலாளர்களுக்கு களிமண்ணில் உயர் தொழில்நுட்பத்தை புகுத்தும் பயிற்சி பட்டறை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
களிமண்ணை மிகவும் மிருதுவாக மாற்றி பெண்கள் அணியும் நவீன மாலை, கம்மல், காதணி, நெக்லஸ் என பல்வேறு நகைகளும், மைக்ரோ ஓவனில் வைக்ககூடிய மண்பானை, களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய குளிர்சாதன பெட்டி, குவளைகள் என பல்வேறு பொருட்களை செய்யும் பயிற்சி பட்டறை ஆழ்வார்குறிச்சி குலாவர் தெருவில் நேற்று நடந்தது.
இந்த பயிற்சி பட்டறையை பரமகல்யாணி கல்லூரி உயர் விலங்கியல் துறை தலைவர் ரஞ்சித் சிங் தலைமை வகித்து துவக்கி வைத்தார். பேராசிரியர் சுதாகர் முன்னிலை வகித்தார். மண்பண்ட தொழிலாளி முனியாண்டி வரவேற்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications