சபரிமலைக்கு ஜன.15-ம் தேதி வரை சிறப்பு ரயி்ல்கள்: ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள் வரும் 15-ம் தேதி வரை இயக்கப்படும் என ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா நேற்று முன்தினம் சபரிமலைக்கு வந்தார்.
ஐயப்பனை தரிசித்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
சபரிமலை ரயில்பாதைக்கு அடுத்த ரயில்வே பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்படும். சபரிமலை சீசனை முன்னிட்டு இந்தியாவி்ன் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் வரும் 15-ம் தேதி வரை இயக்கப்படு்ம் என்றார்.
பின்னர் தேவசம்போர்டு சார்பில் அமைச்சர் முனியப்பாவிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அதில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், சபரிமலை வரும் பக்தர்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் திருவனந்தபுரத்தில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு பேருந்து விடப்பட்டுள்ளது. இந்த பேருந்து தினமும் இரவு 9 மணிக்கு திருவனந்தபுரம் பழவங்காடு கணபதி கோவில் அருகில் இருந்து புறப்படும்.
இது கொட்டாரக்கரை, அடூர், பத்தனம்திட்டா வழியாக பம்பை செல்லும். அங்கிருந்து தினமும் காலை 11 மணி்க்கு திருவனந்தபுரத்திற்கு பேருந்து இயக்கப்படும். இதற்கான டிக்கெட் கட்டணம் ரூ.120 ஆகும். முன்பதிவு செய்ய ரூ.5 கூடுதலாக செலுத்த வேண்டும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications