துபாய் தமிழ்த்தேர் ஐந்தாம் ஆண்டு விழாவில் நடிகை மனோரமாவுக்கு விருது
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்திலிருந்து பழ.நெடுமாறன் அவர்களும் கின்னஸ் சாதனை நாயகி - ஆச்சி மனோரமா அவர்களும் பங்கேற்றனர்.
செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில், வானலை வளர்தமிழ் அமைப்பின் தலைவர் திரு.கோவிந்தராஜ் வரவேற்புரை நிகழ்த்த, செயலாளர் சிம்மபாரதி ஆண்டறிக்கையுடன், விழாவில் நாட்டிய விருந்தளித்தார் செல்வி நிவேதிதா குழுவினர்.
மன வளர்ச்சி குன்றிய செல்வன் கார்த்திக் வழங்கிய பாடல் சபையின் ஒட்டுமொத்தப் பாராட்டுக்களை அள்ளியது. செல்வி ஸ்ரீவித்யா வழங்கிய நாத இன்பமும், தொலைக்காட்சிப் புகழ் மேகநாதன் அவர்களின் நகைச்சுவை விருந்தும்..குழந்தைகளின் விருப்பத்திற்கிணங்க வழங்கப்பட்ட மாயாஜாலக்காட்சிகளும் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கின.
முத்தமிழ்க் காவியம் விருது
தொடர்ந்து தமிழ்த்தேரின் ஐந்தாம் ஆண்டுமலர், சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்பட, விழாவின் சிறப்புக்கட்டமாக ஆச்சி மனோரமா அவர்களுக்கு வானலை வளர்தமிழ்-தமிழ்த்தேர் சார்பில் முத்தமிழ்க் காவியம் என்கிற பட்டம் திரு.பழ.நெடுமாறன் அவர்களால் வழங்கப்பட்டது.
விழாவில் திரு.பஸ்லின், திரு.குத்தாலம் அஸ்ரப் மற்றும் திரு.அஜ்மான் மூர்த்தியின் சிற்றுரையைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய திரு.பழ.நெடுமாறன் அவர்கள் தமிழின் மேன்மை பற்றியும், தமிழரின் கடமை பற்றியும் விரிவாய் எடுத்துரைத்தார். திருவள்ளுவன் தந்த திருக்குறளில் எந்த இடத்திலும் தமிழ் என்கிற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.. காரணம் திருக்குறள் உலகம் முழுமைக்கும் .. உலகில் வாழும் அனைவருக்கும் பொதுமறை என்பதனால் என்று அவர்தந்த புதிய விளக்கம் பாராட்டைப் பெற்றது.
ஆச்சி மனோரமா அவர்களின் சிறப்புரை பல்சுவை நிறைந்ததாய் அமைந்திருந்தது. பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க.. அவர் பாடிய, பல திரைப்பாடல்களை பாடி பரவசப்படுத்தினார். மேலும்.. தமிழ் மொழி பற்றி அவர் பாடிய ஒரு பாடல் தமிழ்த்தேருக்கு அலங்காரம் செய்ததுபோலிருந்தது. 75ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் நாளில் தனக்கு வழங்கப்பட்ட முத்தமிழ்க்காவியம் என்கிற பட்டத்திற்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்!
சிறப்பு விருந்தினர் பற்றிய நர்கிஸ் ஜியாவுதீனின் கவிதை, கவிஞர்.சந்திரசேகரால் எழுதப்பட்ட நிவேதிதா ஆனந்தனின் மனோரமா பற்றிய பாடல் உட்பட, வானலை வளர்தமிழ் அங்கத்தினரால் நடிக்கப்பட்டு முழுக்க முழுக்க அதன் அங்கத்தினராலேயே தயாரிக்கப்பட்ட "தமிழ்த்தேரே" வீடியோ சிடி காண்போரை கவர்ந்திழுத்தது.
கவிதைத் தொகுப்பு
துணைச் செயலாளர் முகவை முகிலின் “ஈச்சமர நிழலில்" கவிதைத் தொகுப்பு, குருந்தகட்டுடன் விழாவில் வெளியிடப் பட்டது. தமிழ்த்தேரின் ஆசிரியர் கவிஞர் காவிரிமைந்தன் , நிவேதிதா ஆனந்தனுடன் இணைந்து தொகுத்து வழங்க, இறுதியாகதமிழ்த்தேரின் பொறுப்பாசிரியர் ஜியாவுதீன் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கோவிந்தராஜன், சிம்மபாரதி, கீழைராஸா, ஆனந்தன் மற்றும் காவிரிமைந்தன், ஜியாவுதீன், லட்சுமி நாராயணன், முகவைமுகில், ஆதிபழனி, அபுதாபி டி.எம்.பழனி, துரை மலைவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications