காணும் பொங்கல்: பாபநாசம் மலைக்கு செல்ல வனத்துறை கடும் கட்டுப்பாடு
வி.கே.புரம்: காணும் பொங்கல் அன்று பாபநாசம் மலைக்கு செல்ல வனத்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து பாபநாசம் வனசரகர் கிதிரோலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
வரும் 16-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, சேர்வலாறு, சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதிகளுக்கு சென்று மகிழ்வார்கள். அப்படி செல்பவர்கள் வனவிலங்குகளை துன்புறுத்தக் கூடாது.
எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை கொண்டு செல்லக் கூடாது. மதுபானம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். சோற்றில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். திறந்த வெளி வாகனங்களில் செல்லக் கூடாது.
காட்டுப் பகுதியி்ல் அடுப்பு மூட்டி சமைக்க கூடாது. வாகனங்களில் பாட்டுகளை ஒலிபரப்பக் கூடாது. அது மட்டுமின்றி குறிப்பி்ட்ட வேகத்தில்தான் செல்ல வேண்டும். முண்டந்துறை செக்போஸ்டில் மட்டும் ரூ.15 வசூலிக்கப்படும்.
கோவிலுக்கு செல்பவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. முன்பாக பாபநாசம் செக்போஸ்டில் அதற்கான என்ட்ரி போட்டு செல்ல வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications