ஷார்ஜாவில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டம் நடந்தது
துபாய்: துபாயில் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டம் கடந்த 6-ம் தேதி நடைப்பெற்றது.
மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஐக்கிய அரபு அமீரகக் கிளை கடந்த 2004-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் 140-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 6-ம் தேதி முன்னாள் மாணவர்கள் கூட்டம் ஷார்ஜா ரோலாவில் உள்ள அல் முபாரக் சென்டரில் அமைந்திருக்கும் ஏசியன் பேலஸ் ஹோட்டலில் சிறப்பாக நடந்தது. இதில் ஏராளமான உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
தியாராஜர் கல்லூரியின் தலைவர் உயர்திரு. கண்ணன் தியாகராஜன் அவர்களின் வாழ்த்து செய்தி மற்றும் கல்லூரியின் முதல்வர் உயர்திரு. அபய்குமார் அவர்களின் விரிவான இன்றைய நிலையும் வெள்ளித்திரையில் திரையிடபட்டது
டெக்டான் முதன்மை மேலாளர் திரு. இலக்குமனன், டிசிஇயுஏஇ தலைவர் திரு. கிரிஸ்டோபர், யு.ஏ.இ. தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. ரமேஷ் விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தங்களுடைய அனுபவத்தை மிக அழகாக தெரிவித்தார்கள். "நாம் ஏன் சம்பளம் வாங்குபவராக இருக்க வேண்டும், ஏன் கொடுப்பவராக இருக்கக்கூடாது" என்று திரு. இலக்குமனன் கூறியது அனைவரையும் யோசிக்க வைத்தது.
டிசிஇயுஏஇ-ன் செயலாளர் திரு. சிவக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சி இரவு 11:00 மணிவரை நீடித்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. கடந்த கால நினைவுகள் வெகு அழகாக பரிமாரப்பட்டது. கல்லுரியின் புகைப்படம் மற்றும் இதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திரையில் காண்பிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடையும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது. கல்லூரி முன்னாள் மாணவரின் குழந்தைகள் மீனாக்ஷி தேனப்பனின் பரதநாட்டிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து யுஏஇ தமிழ்ச்சங்கத்தின் கலை நிகழ்ச்சியும், திருமதி. கங்கா ரமேஷ் நடனக்குழுவின் அற்புதமான நாட்டியமும் வந்தவர்களுடைய பாராட்டை பெற்றது.
திருமதி. கங்கா ரமேஷ், திருமதி. கீதா பாலா, திருமதி. கீதா கதிர், திருமதி. ஜமுனா ஷோபன், திரு.பாலாஜி, திரு.கிஷோர், திரு.வெங்கட், மாஸ்டர் ஸ்ரீனிவாசன் ஆகியோருடைய பாடல்கள் வெகு சிறப்பாக இருந்தது.
மாஸ்டர் ரோஷன், மாஸ்டர் நிஷாந்த் இருவரும் தங்களுடைய திறமையை கீபோர்டின் மூலமாக மக்களுக்கு தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
இவ்விழாவை குருகிய காலத்தில் வெகுசிறப்பாக ஏற்பாடு செய்திருந்த திரு. சிவகுமார், திரு. அரவிந்த், திரு.ராஜா, திரு. மன்னவன், திரு. உதயகுமார், திரு. முஹம்மது அபூபக்கர் அவர்களுக்கும், அன்னைத்து உறுப்பினர்க்களுக்க்கும், நண்பர்களுக்கும் திரு. மன்னவன் நன்றி தெரிவித்தார்.
நன்றி உரையுடன் விழா நிறைவுற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் யாராவது இந்த சங்கத்தில் சேர விரும்பினால் கீழ்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
திரு. சிவக்குமார் +971 50 8361629 , திரு சிவகுமார்-050 7260633 , திரு.ராஜா-0506942448, திரு.மன்னவன் 050-6501893. அல்லது tceuae @gmail .com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மெயில் அனுப்பலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications