அரசு போட்டி தேர்வுகளில் தியாகிகள் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு
நெல்லை: சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தி்ல் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு கடந்த 1971-ம் ஆண்டு முதல் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. துவக்கத்தில் 5,186 பேர் தியாகிகளுக்கான பென்சன் வாங்கியுள்ளனர். தற்போது நேரடி சுதந்திர போராட்ட தியாகிகள் சுமார் 1300 பேர் தமிழகத்தில் வசிக்கின்றனர். இவர்களின் வாரிசுகள் தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் இருக்கின்றனர்.
தியாகிகளி்ன் வாரிசுகள் ஒவ்வொறு ஆண்டும் குடியரசு தின மற்றும் சுதந்திர தின நிகழ்ச்சிகளின் போது கவுரவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டி தேர்வுகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுகள் அமைப்பின் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை பரிசீலித்த அரசு இடஒதுக்கீடு வழங்குவதில் முனைப்பு காட்ட தொடங்கியுள்ளது.
மேலும் இந்த கோரிக்கை மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள தியாகிகளின் பேரன், பேத்திகள் விபரங்களை உடனடியாக சேகரித்து அந்த விபரங்களை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான கடிதங்களை அரசின் பொதுத் துறை துணை செயலாளர் வசந்தி ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications