அரியலூரில் நீதிமன்றங்களுக்கு பூட்டுபோட்டு வழக்கறிஞர்கள் போராட்டம்
அரியலூர்: அரியலூரில் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கோரி நீதிமன்றங்களுக்கு பூட்டு போட்டு வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.
அரியலூரில் விரைவு நீதிமன்றம், கூடுதல் அமர்வு நீதிமன்றம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகிய 5 நீதிமன்றங்கள் உள்ளன. இங்கு 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் 31வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் உதயமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை அரியலூரில் மாவட்ட நீதிமன்றம் அமைக்கப்படவில்லை என்பதால் உடனே மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் மாவட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 8-ம் தேதி முதல் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூரில் உள்ள 5 நீதிமன்றங்களின் கதவுகளை வழக்கறிஞர்கள் இழுத்துப் பூட்டி பூட்டு போட்டனர். மெயின்கேட்டையும் இழுத்து பூட்டினர். பின்பு நீதிமன்ற வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நீதிமன்றங்கள் பூட்டப்பட்ட சம்பவத்தால் அரியலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications