திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று முதல் மீண்டும் தர்ம தரிசனம்: பக்தர்கள் மகிழ்ச்சி
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் தர்ம தரிசன திட்டம் இன்று முதல் மீண்டும் அமல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் புகழ் பெற்ற கோவில்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த பக்தர்களும், இலங்கையைச் சேர்ந்த பல முக்கிய விவிஐபிகளும் வந்து சாமி தரிசனம் செய்வர்.
கடந்த 2009ம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட தர்ம தரிசன திட்டம் இன்று முதல் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்செந்தூர் கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தினமும் மூன்று கால பூஜைகள் முடிந்த பின் பக்தர்கள் சுவாமியை தர்ம தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர். கடந்த 2009ம் ஆண்டு நடந்த கோவில் கும்பாபிஷேகத்திற்கு முன், இந்த தரிசன முறை திடீரென ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று முதல் மூன்று கால பூஜைகள் முடிந்ததும், பக்தர்கள் சிறப்பு தரிசன பகுதி வழியாக, தர்ம தரிசனத்திற்கு அரை மணி நேரம் அனுமதிக்கப்பட உள்ளனர் என்றார்.
கோவில் நிர்வாக்கதின் இந்த அறிவிப்பு பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications