துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் இஃப்தார்: அப்துல் ரஹ்மான் எம்.பி. பங்கேற்பு
துபாய்: துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்தின் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. இதில் அப்துல் ரஹ்மான் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வெள்ளிவிழா கண்ட துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்தின் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி லால்பேட்டை ரூம் மேல் மாடியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு எம்.ஏ.முஹம்மது சையது தலமை வகித்தார். துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவர் ஆர். பி. அப்துல் ஃபத்தாஹ், செயலாளர் ஓ.ஆர். தாஹிர் உசேன், பொருளாளர் பி.எம். ஃபைஜல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழச்சியின் துவக்கமாக மெளலவி ஹாபிள் அபுல் கலாம் ஆசாத் கிராஅத் ஓதினார். எஸ்.எம். அப்துல் வாஜிது வரவேற்புரையாற்றினார். நாடாளுமன்ற உறுப்பினரும்,காயிதே மில்லத் பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாருமான எம். அப்துல் ரஹ்மான், லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் பேராசிரியர் காரி ஆர். இஸட். முஹம்மது அஹமது ஹஜ்ரத், துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குற்றாலம் ஏ.லியாகத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் லால்பேட்டையின் அனைத்து உறுப்பினர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர் அப்துல் ரஹ்மான் எம்.பி. தனது உரையில் லால்பேட்டை மாநகரின் பாரம்பரிய பெருமையை சுட்டிக்காட்டி, தனக்கும் லால்பேட்டை நகருக்கும் உள்ள நெருக்கத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். மக்கள் இயக்க வேறுபாடுகளை புறம் தள்ளி, குடுமப உறுப்பினர்கள், உற்றார் உறவினர்களை அரவணைத்து வாழவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு துபாய் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் அப்துல் ஃபத்தாஹ், செயலாளர் ஓ. ஆர். தாஹிர் உசேன், ஏ.எம். ஜெகரிய்யா ஆகியோர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
நிகழ்ச்சியில் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் தலைவர் மெளலவி அமீனுல் ஹுஸைன், பொதுச் செயலாளர் யாசிர் அரஃபாத் அலி, பொருளாளர் இலியாஸ், சுஐபுத்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா, அபுதாபி மண்டலச் செயலாளர் ஏ.எஸ். அப்துல் ரஹ்மான், காயல் யஹ்யா முஹையத்தீன் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் பிரதிநிதிகளும் திரளாக பங்கேற்றனர்.
ஏ. எம். ஜெகரிய்யா நன்றி கூற காரி ஹஜ்ரத் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications