தீபாவளியன்று திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா துவக்கம்

இது குறித்து கோவில் இணை ஆணையர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது,
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலின் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வரும் 26ம் தேதி தீபாவளியன்று துவங்குகிறது. 31ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. கந்த சஷ்டி திருவிழாவையொட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது.
சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளை பார்ப்பதற்காக 20 இடங்களில் பிளாஸ்மா டிவியும், அனைத்து விடுதிகளிலும் டிவியும் வைக்கப்படும். 31ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சிகளை காண 2 இடங்களில் எல்இடி டிவி வைக்கப்படும். அன்றைய நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் 26 இடங்களில் குடிநீர் வசதி செய்யப்படும்.
மேலும் குளியலறை, கழிப்பறை வசதிகள் போதிய அளவில் செய்யப்பட்டுள்ளன. சஷ்டி திருவிழாவில் 6 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வதால் கூடுதலாக 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
கோவில் வளாகத்திலும், கடற்கரை மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளிலும் 25 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் திருடர்கள் மற்றும் சமூக விரோதிகள் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையில் 10 இடங்களில் உயர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications