சபரிமலை: ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 7 முதல் 15 வரை நிறுத்தம்: தேவசம்போர்டு முடிவு
திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை வரும் ஜனவரி 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நிறுத்த தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
சபரி்மலை ஐயப்ப சாமி கோவிலில் கடந்த 17ம் தேதி மண்டல பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்கிறார்கள்.
நாள்தோறும் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தினமும் இரவு ஹரிவராசனம் பாடி முடிந்து நடை சாத்திய பின்னரும் நடை பந்தலில் காத்திருந்து பக்தர்கள் மறுநாள் ஐயப்பனை தரிசித்து விட்டு திரும்புகிறார்கள். இந்த நிலையில் ஆன்லைன் முன் பதிவு மூலம் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மரக்கூட்டத்திலிருந்து நேராக நடைப்பந்தலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அதன் பின்பு அவர்கள் இலகுவாக தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
இதற்கிடையே ஜனவரி 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு செய்யும் வசதியை நிறுத்தி வைக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. மகர விளக்கு பூஜை தொடங்குவதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் கூடுவார்கள். இதன் காரணமாக ஆன்லைன் முன்பதிவு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications