நாமக்கல்லில் கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது விழா 2011
கு.சின்னப்ப பாரதி அவர்கள் பொதுவுடைமைக் கொள்கைகளைத் தாங்கி, உழைக்கும் மக்களின் வாழ்க்கையைத் தம் புதினங்களில் இடம்பெறச் செய்தவர். நிலைத்த படைப்புகளை வழங்கி உலகப் புகழ்பெற்றவர். இவர்தம் பெயரில் அமைந்துள்ள அறக்கட்டளை சார்பில் சிறந்த நூல்கள் தேர்ந்தெடுக்கப்பெற்றுப் பணப்பரிசில் வழங்கிப் பாராட்டப்பட உள்ளன.
இதற்கான விழா எதிர்வரும் அக்டோபர் இரண்டாம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள செல்வம் பொறியியல் கல்லூரியின் கலையரங்கில் நடைபெற உள்ளது.
காலை 9.30 மணியளவில் தொடங்கும் விழாவிற்குச் செல்வம் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர் பொ.செல்வராஜ் அவர்கள் தலைமை தாங்குகின்றார். இந்த விழாவில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், இதழாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். வெளிநாட்டிலிருந்தும் பல பேராளர்கள் வருகைதர உள்ளனர்.
முனைவர் பா,கவீத்ரா நந்தினி, எழுத்தாளர் அந்தோனி ஜீவா, எஸ்.பி.இராமசாமி, எஸ்.கே.சம்பத், ஆர்.செந்தில்முருகன், எஸ்.இராஜ்குமார், ஆகியோர் முன்னிலையில் விழா நடைபெறுகின்றது.
கா.பழனிச்சாமி வரவேற்புரையாற்றவும், ச.தமிழ்ச்செல்வன் தொடக்க உரையாற்றவும் உள்ளனர். பரிசளிப்பின் நோக்கத்தைக் கு.சின்னப்ப பாரதி விளக்கிப் பேச உள்ளார். சி.ப.கருப்பண்ணன் அவர்கள் பரிசுபெறுபவர்களை அறிமுகம் செய்து உரையாற்றுவார்.
சிறப்பு விருந்தினராகத் தினமணி நாளிதழின் ஆசிரியர் கே.வைத்தியநாதன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். வவுனியா இரா.உதயணன், அத்திப்பள்ளி இராம மோகனராவ் (தெலுங்குமொழிப் படைப்பாளர்) ஆகியோர் விருதும் பரிசும் பெற உள்ளனர்.
சிறப்புப் பரிசிலாக வெளிநாட்டினர் பத்துப்பேரும், தமிழ்நாட்டினர் பன்னிருவரும் பரிசுபெற உள்ளனர். நாமக்கல் என்.சிவப்பிரகாசம் அவர்களுக்கு ஊழல் எதிர்ப்புச் சேவைக்கான பரிசு வழங்கப்பட உள்ளது. நூல் வெளியீடும் நடைபெறுகின்றது. சி.அரங்கசாமி நன்றியுரையாற்ற உள்ளார். விழா ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் நா.செந்தில்குமார் தொகுப்புரை வழங்க உள்ளார்
நன்றி http://muelangovan.blogspot.com
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications