இனி வாரத்தில் 5 நாள் மட்டுமே ஊட்டி மலை ரயில் ஓடும்: தென்னக ரயில்வே

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தென்னக ரயில்வே சார்பில் மலை ரயில் தினசரி இயக்கப்படுகிறது. இந்த ரயில் கடந்த சில தினங்களாக சரியான நேரத்திற்கும் வருவதில்லை, பல முறை நடுவில் பழுதடைந்தும் விடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் தான் அவதிப்படுகிறார்கள். எனவே, ஊட்டி மலை ரயிலை தினசரி சீராக இயக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் ரயில் கோளாறுகள் குறி்தது ஆய்வு செய்ய நேற்று தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிரிஷண், தலைமை மெக்கானிக்கல் என்ஜினீயர் சூட், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் டி.என்.ராம் மற்றும் ரயில்வே அதிகாரிகள் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டனர்.
அந்த ரயில் கல்லார்-ஆடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கையில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு பாதியிலேயே நின்றது.
இதையடுத்து அதிகாரிகள் கல்லார் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து வாகனம் மூலம் குன்னூர் சென்றனர்.
குன்னூரில் உள்ள லோகோ பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த என்ஜின்களை பொது மேலாளர் தீபக் கிரிஷண் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
ரயில் என்ஜின்களை பராமரிக்கும் பொருட்டு இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தான் மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் இயக்கப்படும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நிச்சயமாக மலை ரயில் இயக்கப்படும்.
பயணிகள் பாதுகாப்பாகவும், மனநிறைவுடனும் பயணம் செய்ய வேண்டும் என்பது தான் தெற்கு ரயில்வேயின் முக்கிய குறிக்கோளாகும். இதை கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications