சுற்றுலா பயணிகளை கவரும் வகையி்ல குமரியில் ரூ.2.25 கோடியில் ஒலி- ஒளி காட்சி கூடம்

கன்னியாகுமரியில் 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள ஒலி-ஒளி காட்சி கூடத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், மதுரை மஹாலில் ஒலி-ஒளி காட்சி கூடம் இருப்பது போல் கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களிலும் அமைக்கப்படுகிறது.
சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, பகவதியம்மன் கோயில், புனித அலங்கார உபகார அன்னை ஆலயம், திற்பரப்பு நீர்வீழ்ச்சி, பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டிப்பாலம், சொத்தவிளை கடற்கரை போன்ற சுற்றுலா தலங்களை பற்றி கன்னியாகுமரிக்கு வரும் அனைத்து சுற்றுலாபயணிகளும் அறியும் வகையில் ஒலி-ஒளி காட்சி கூடம் அமைக்கப்படுகிறது.
மாலை, 6 மணிக்கு துவங்கும் இந்த ஒலி-ஒளி காட்சிகள் தினமும், 2 காட்சிகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் கடற்கரையை ஒட்டியுள்ள இடத்தில் 200 பேர் அமரும் வகையில் காலரி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஜெனரேட்டர் அறை, புரெஜக்டர் அறை, கம்ப்யூட்டர் சாதனம் காமிரா போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் அமைய உள்ள இந்த ஒலி-ஒளி கூடத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பணி நடந்து வருகிறது. தமிழ், ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் இந்த காட்சி கூடம் அமைக்கப்பட்டு, இந்தாண்டு இறுதிக்குள் செயல்படுத்த சுற்றுலாத்துறை முயன்று வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications