டெல்லி தமிழ் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிவிப்பு-தலைவராக கிருஷ்ணமணி தேர்வு
டெல்லி: டெல்லி தமிழ் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியி்ல் உள்ள தமிழ் சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த வாரம் நடந்தது. இதன்மூலம், புதிய சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்படி, சங்கத் தலைவராக, எம்.என். கிருஷ்ணமணியும், துணைத் தலைவராக ரமாமணி சுந்தரும், பொதுச் செயலாளராக ஆர்.முகந்தனும் செயல்படுவர்.
இணைச் செயலாளர் ராகவன் நாயுடு
இணைச் செயலர்களாக கெளரி இளங்கோவன், பி.ராகவன் நாயுடு ஆகியோரும், பொருளாளராக பி.அறிவழகனும், இணைப் பொருளாளராக எஸ்.நரசிம்ம மூர்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களான வி.அனுராதா, உமா பிரபாகர், எம்.ஆறுமுகம், கே.ஆர்.இளங்கோ, சு.லட்சுமணன், ப.ராமமூர்த்தி, சேதுராமன், பி.சங்கர், டாக்டர் எம்.சுந்தரராஜன், அ.வெங்கடேசன் ஆகியோர் செயல்படுவார்கள். மேலும் காத்திருப்பு உறுப்பினர்களாக பி.குமார், எஸ்.பெரியசாமி ஆகியோர் வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications