For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபத்தில் காயமடைந்த கண்டக்டருக்கு நஷ்ட ஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி

Google Oneindia Tamil News

கோவில்பட்டி: விபத்தில் சிக்கி காயமடைந்த பேருந்து நடத்துனருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. பயணிகளை இறக்கி விட்டு விட்டு பேருந்தை ஜப்தி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்பட்டி ஜோதி நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அரசு பேருந்து நடத்துனர் ஆவார். கடந்த 2009 செப்டம்பர் 30ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கோவில்பட்டி சென்ற அரசு பஸ்சில் பணியில் இருந்தார்.

அப்போது இனாம் மணியாச்சி பைபாஸ் சாலையில் எதிரே வந்த டேங்கர் லாரி மீது மோதி பஸ் விபத்துக்குள்ளானது. இதில் முருகானந்தத்துக்கு கை முறிவு ஏற்பட்டது. இதுகுறித்து முருகானந்தம் கோவில்பட்டி சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு ரூ.1.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இருப்பினும் இதுவரை நஷ்ட ஈடு வழங்காததால் அவர் மேலும் ஒரு மனுதாக்கல் செய்தார்.

இதனையடுத்து அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதன்படி கோர்ட் அமீனா மாரியப்பன் உள்பட ஊழியர்கள் கோவில்பட்டி பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை ஜப்தி செய்தனர். பயணிகளை கீழே இறக்கி வி்ட்டு ஜப்தி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
Kovilpatti court ordered to attach a Govt bus, after the Govt failed to give compensation to a conductor who was injured in an accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X