20ம் தேதி ஜெத்தாவில் மகளிர், குழந்தைகளுக்கான கலை நிகழ்ச்சி
ஜெத்தா: ஜெத்தாவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொள்ளும் கலைநிகழ்சசி வரும் 20-ம் தேதி மாலை 6 மணிக்கு இம்பாலா உணவகத்தில் நடக்கிறது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெண்களால் நடத்தப்பட்டும் கலைநிகழ்ச்சி வரும் 20-ம் தேதி ஜெத்தா, ஷரபியாவில் உள்ள இம்பாலா உணவகத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை நடக்கிறது.
கோடை விடுமுறை கொண்டாட்டமா? திண்டாட்டமா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடக்கிறது. ஒரு சொல் ஒரு லட்சம் என்னும் வார்த்தை விளையாட்டு நடத்தப்படுகிறது.
தேவையற்ற பொருட்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்யும் போட்டி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தேவையான பொருட்களை தாங்களே கொண்டு வர வேண்டும்.
பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அட்டைப் பலகையில் பந்து விளையாட்டு மற்றும் வினோத விளையாட்டுப் போட்டிகள் நடக்கவிருக்கின்றன.
சிறுவர், சிறுமியர்களுக்கான ஓவியம் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகளும் நடத்தப்படுகிறது. கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின்போது பரிசுகள் வழங்கப்படும்.
அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி என்பதால் ஆண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் பெண்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது குறித்து மேலும் விவரம் அறிய விரும்புவோர் தில்ஷாத் அக்பர் பாட்சா - 617 8246, மும்தாஜ் சீனி அலி - 674 4785, நஜ்மா ஜின்னா - 631 2285 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications