குழந்தைகளை பாராட்ட இனிப்பு கொடுக்காதீர்: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

குழந்தைகள் சேட்டை செய்யாமல் இருந்தால், படிப்பில் கெட்டிக்காரராக இருந்தால் உடனே பெற்றோர் அவர்களுக்கு இனிப்புகளோ அல்லது நொறுக்குத் தீனியோ கொடுத்து பாராட்டுகின்றனர். இன்னும் சிலர் ஒழுங்காக படித்தால், அடம்பிடிக்காமல் இருந்தால் சாக்லேட் வாங்கித் தருவேன் என்பார்க்ள். அவ்வாறு செய்வது மிகத் தவறு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். பெற்றோர்கள் இப்படி எதற்கெடுத்தாலும் இனிப்பு, நொறுக்குத் தீனி கொடுத்தால் குழந்தைகளுக்கு பருமந்தனம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களின் இந்த பழக்கத்தால் குழந்தைகள் பெரியவர்களானதும் உணவுப் பழக்கம் கெடும், அவர்கள் தன்னம்பிக்கை குறையும் மற்றும் உணவுக் குறைபாடுகள் ஏற்படும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications