இணையம் மூலம் 'ஈசியாக' இணையும் இளைய தலைமுறை

இணைய தள திருமணதகவல் சேவை மையங்கள் இன்றைய தலைமுறையினருக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஊர் ஊராக வரன் தேடி அலைவதைவிட உட்கார்ந்த இடத்திலேயே ஆயிரக்கணக்கான வரன்களின் தகவல்கள் கிடைப்பதால் இளைய தலைமுறையினர் தங்கள் வாழ்க்கைத் துணையை இணைய தள திருமண தகவல்மையங்கள் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
பத்தாண்டுகளுக்கும் மேலாக திருமண தகவல்மையம் நடத்தி வெற்றி பெற்றுள்ள பாரத் மேட்ரிமோனி, கல்யாணமாலை மேட்ரிமோனி ஆகிய திருமண தகவல்மைய நிறுவனர்கள் தங்களின் அனுபவத்தையும் வெற்றியின் ரகசியத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
இளையதலைமுறையின் எதிர்பார்ப்பு
தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடைந்துள்ளதால் இளைய தலைமுறையினருக்கு வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதில் இணையதளம், ஆன்லைன் திருமண தகவல்மையங்கள் அதிக அளவில் உதவிபுரிகின்றன. திருமணத்திற்கு துணையைத் தேடும் பெரும்பாலான இந்தியர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களையே அதிகம் விரும்புகின்றனர். மதம், ஜாதி, வயது. இருப்பிடம், உயரம், கல்வித்தகுதி, வேலை ஆகிய அடிப்படை அம்சங்களுடன் கூடிய துணையை தேடுவதாகவும் பாரத் மேட்ரிமோனி இணையதள திருமண தகவல் மையத்தின் நிறுவனர் முருகவேல் ஜனாகிராமன் தெரிவித்துள்ளார்.
கிராமமோ, நகர்புறமோ, எந்த பகுதியில் வசிக்கும் மணமகனோ, மணமகளோ இருவரின் எதிர்பார்ப்புமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் ஒத்த கருத்துடைய துணையைத்தான் அதிகம் தேடுவதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்களின் பொழுதுபோக்கு, ஆர்வம் போன்ற பரஸ்பர விருப்பத்திற்கு ஏற்ப தேடலுக்கு உதவிபுரிவதாகவும் முருகவேல் கூறியுள்ளார்.
விவகரத்தானவர்களுக்கு புதிய வாழ்க்கை
வரன் தேர்வில் மதம், ஜாதி,வயது, இருப்பிடம்,உயரம், கல்வி மற்றும் வேலை போன்றவை முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருசிலர் இருப்பிடத்தை பொருட்படுத்துவதில்லை என்றும் கூறியுள்ளார். விவாகரத்து செய்து கொண்டவர்களுக்காக செயல்படும் விவாகரத்து திருமண தகவல் மையம் புரட்சிகரமான சேவையை செய்து வருவதாக தெரிவித்தார். சரிப்பட்டு வராத பழைய வாழ்க்கையை முறித்துகொண்டவர்களுக்கு புதிய வாழ்க்கையை தொடங்க விவாகரத்து திருமண மையம் சிறந்த வழிகாட்டியாக உள்ளதாகவும் ஜானகிராமன் கூறியுள்ளார்.
புறநகருக்கு குடிபெயரும் தம்பதியர்
சென்னையை தலைமையிடமாகக் கொண்ட பிரசித்தி பெற்ற கல்யாணமாலை திருமண தகவல் மையத்தின் நிறுவனர் வெங்கடேசன் வித்தியாசமான கருத்தை முன்வைக்கிறார். நகர்புறங்களில் இருந்து மட்டுமே மணமகன் மற்றும் மணமகளை தேர்வு செய்வதாக கூறியுள்ளார். ஆனால் 95 சதவிகித மணமக்கள் திருமணத்திற்குப்பின்னர் சென்னை அல்லது பெங்களூரின் புறநகர் பகுதிக்கு குடிபெயர்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார். தவிர்க்க முடியாத பட்சத்தில் ஒருசிலர் மட்டுமே புறநகர் பகுதியில் வசிப்பவர்களை திருமணம் செய்து கொள்ள தேர்வு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
பலதரப்பட்ட தளங்களில் செயல்படுவதே தங்களின் வெற்றியின் ரகசியம் என்கிறார் கேஎம்எம் வெங்கடேசன். இணையதளங்கள், பருவஇதழ்கள், தொலைகாட்சிகளுடன் இணைந்து புதிய முறையில் செயல்படுவதன் மூலம் அதிக அளவில் சேவை செய்ய முடிவதாக அவர் கூறியுள்ளார். தொலைக்காட்சி, இணையதளம், செல்போன், போன்றவற்றின் மூலம் சந்தித்துக்கொண்ட மணமகளோ, மணமகனோ வெற்றிகரமாக திருமணம் முடிந்து வாழ்வை தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்,
சேவைகள் பலவிதம்
இரண்டு குடும்பங்களை பிரத்யேகமாக சந்திக்க வைப்பதும் பல தரப்பட்ட சமூகத்தை சேர்ந்த வரன்களை அவர்களின் பெற்றோருடன் ஒரே கூரையின் கீழ் சந்திக்க வைப்பதும் தங்களின் சிறப்பம்சம் என்று வெங்கடேசன் கூறியுள்ளார் மேலும் சாதிவாரியாக நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தென்னிந்தியா முழுவதும் சேவை
விதவைகளுக்கும், மாற்றுத்திறனாளி மணமகளுக்கும் இலவச சேவை புரிவதாகவும், இதுவரை 300-க்கும் மேற்பட்ட விதவைப் பெண்களுக்கு புது வை அமைத்து தந்திருப்பதாக வெங்கடேசன் கூறியுள்ளார்.
இதுவரை தமிழர்களுக்கு மட்டுமே சேவை செய்து வந்த தங்களின் திருமண தகவல் மையம் இனி தெலுங்கு, கன்னடம் மலையாள மொழி பேசுபவர்களுக்கும் விரிவுபடுத்த உள்ளதாகவும் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications