கத்தாரில் நடந்த பிரமாண்ட கலை நிகழ்ச்சி: சினேகா, எஸ்.வீ. சேகர் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் புன்னகை இளவரசி சினேகா, நகைச்சுவை நாடகப் புகழ் கலைமாமணி எஸ்.வீ. சேகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கிரேஸ் கருணாஸ் இசை நிகழ்ச்சி, மானாட மயிலாட சாண்டி, ஸ்வேதா, கிரிஷ், சுனிதா நடனம் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் அஜீஷ், சாய் சரண், பூஜா ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.
சாய் சரண் பாடிய பலே பாண்டியா படத்தில் வரும் 'மாமா, மாப்ளே' பாட்டு சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களையும் குலுங்க குலுஙகச் சிரிக்க வைத்தது. அஜீஷின் மாயக் குரலில் கோவா படத்தின் 'இது வரை' பாட்டு அனைவரின் மனதை ஈர்த்தது என்றால், கிரேஸ் கருணாசின் பருத்தி வீரன் குத்துப் பாட்டு ரசிகர்கள் பலரை இருக்கையில் இருந்து எழுந்து ஆட்டம் போட வைத்தது.
கிரேஸ் குழுவின் லக்ஷ்மி செல்வம், தனது இனிய குரலில் பாடியது மட்டுமில்லாமல் மயில் போன்று ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதை எஸ்.வீ. சேகரும் தனது பேச்சின்போது குறிப்பிட்டார்.
பிரசன்னா சினேகாவைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்திருந்தும், கத்தார் வந்த சினேகா தனது வருங்கால கணவரின் பெயரைக் கூட சொல்லவில்லை. ஆனால் அவருக்கு வாழ்த்து தெரிவித்த எஸ்.வீ. சேகரின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கினார்.
எஸ்.வீ. சேகரின் பேச்சில் பார்வையாளர்கள் தங்களை மறந்து சிரித்தனர். 'தங்கபாலு ஒரு விஷயத்தை, அதுவும் மகாத்மா காந்தி சொன்னதை, கரெக்டா பண்ணினார். விடுதலை வாங்கின உடனே 'நாம உடனடியாய் இந்த காங்கிரஸ் கட்சியை கலைச்சிடனும்' னு காந்தி சொன்னார். அதை இத்தனை வருஷத்துக்கு அப்பறம் தங்கபாலு தமிழ் நாட்டில் நிறைவேற்றியுள்ளார் என்றதும் அரங்கம் சிரிப்பலையில் அதிர்ந்தது.
கவுண்டமணி, செந்திலை தமிழ் நாட்டின் லாரல்-ஹார்டி என்று புகழ்ந்த எஸ்.வீ.சேகர், வடிவேலு போன்ற அருமையான, அனைத்து தரப்பினரையும் ஈர்த்த காமெடியனும் இல்லை என்று குறிப்பிட்டார். 'வடிவேலுவோட காமெடியை அடிச்சுக்க முடியாது. அவரோட அரசியல் காமெடி தான் கொஞ்சம் சீரியஸா போச்சு' என்று பொது ஜனத்தின் உணர்வுகளை பிரதிபலித்தார். பார்வையாளர் ஒருவர் நகைச்சுவை நாயகன் வால் பையனை பற்றி கேள்வி கேட்க, எஸ்.வீ.சேகர், "நாடகத்துல இருக்கற வால் பையனுக்கு வால் இன்னும் நீண்டுக்கிட்டுதான் இருக்கு, அரசியல் வால் பையனுக்கு தான் ஒட்ட நறுக்கிட்டாங்க" என்று தன்னையும் சாடிக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த தோஹா வங்கிக் குழும முதன்மை செயல் அதிகாரி திரு. ஆர். சீதாராமன், தானும் எஸ்.வீ சேகரும் பால்ய நண்பர்கள் என்றும், ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதையும் தனது உரையில் குறிப்பிட்டார். நிகச்சி நடத்த உதவிய பிற முக்கிய நிறுவனமான ஆச்சி மசாலா தலைவர் திரு. ஐசக் இந்த நிகழ்ச்சியின் மூலமாக கத்தாரில் ஆச்சி மசாலா நிறுவனத் தயாரிப்புகளை அறிமுகப்படுதுவதாய் அறிவித்தார். ஆர். சீத்தாராமனின் தாயார் 'ஆச்சி' யாக அதை பெற்றுக் கொண்டார். தோஹா எக்ஸ்ப்ளோரா நிறுவனமும் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்று.
சரவண பவன் உணவகத்தின் சிறப்பு விற்பனைக் கூடம், காவலர் பாதுகாப்பு, சிறந்த ஒலி-ஒளி அமைப்பு, பெருந்திரையில் ஒளிபரப்பு என்று நிகழ்ச்சி முழுமையாய் களை கட்டியது. கத்தார் தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. சார்லஸ், துணைத் தலைவர் திரு. இஸ்மாயில் நாகூர், பொதுச் செயலாளர் திரு. ஆர். ஸ்ரீனிவாசன் உட்பட அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் பல வாரங்கள் பம்பரமாய் சுழன்று நிகழ்ச்சியை திறம்பட நடத்தி முடித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications