இன்று துபாயில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி: முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் உரை
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை நடத்தும் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று (5-10-11) இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது.
துபாயில் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று இரவு இஷா தொழுகைக்குப் பிறகு 8. 45 மணி அளவில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் 'நூர் அல் முஹம்மதியா முதல் ஸஃபாஅத் அல் முஹம்மதியா வரை' எனும் தலைப்பில் 11-வது பாக உரையினை நிகழ்த்தவிருக்கிறார்.
இதில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications