குவைத்தில் சமூகத் தீமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி- பகுதி 2: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு
குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் சமூகத் தீமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி- பகுதி 2 வரும் 13ம் தேதி இரவு 7 மணிக்கு அப்துல்லாஹ் அல் மஹ்ரீ பள்ளிவாசலில் நடைபெறுகிறது.
குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக "அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்" கொள்கை அடிப்படையில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சமய, சமூக, சமுதாய மற்றும் கல்வி என பல துறைகளில் சேவை செய்து வருகிறது.
அந்த வகையில் கடந்த மாதம் 2-ம் தேதி குவைத், ஃபஹாஹீல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக வரும் 13ம் தேதி இரவு 7 மணிக்கு குவைத் ஸால்மியா பகுதியில் "சமூகத் தீமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி - பகுதி 2" நிகழ்ச்சிக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் மவ்லவி அஷ்ஷைக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ தலைமை வகிக்கிறார். சங்கத்தின் துணை தலைவர்கள் மவ்லவி ஏ. ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ, எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ மற்றும் ஜமாஅத்துல் உலமா குழுவைச் சேர்ந்த மவ்லவி எம். எஸ். அப்துல் குத்தூஸ் ஹஸனீ ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை [email protected] / [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தில் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.
இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள் குவைத்தில் வாழும் தங்கள் நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் இந்த நிகழ்ச்சி குறித்து கூறி அதில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications