குவைத்தில் வாரந்தோறும் வசந்தம் நிகழ்ச்சி: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் ஏற்பாடு
குவைத்: குவைத் கைத்தான் பகுதியில் உள்ள மிக்தாத் பின் அம்ரு (ரழி) பள்ளிவாசலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு 'வாரந்தோறும் வசந்தம்' நிகழ்ச்சியை குவைத் தமி்ழ் இஸ்லாமி்யச் சங்கம் நடத்தி வருகிறது.
குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக "அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்" கொள்கை அடிப்படையில் முதல் முறையாக கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி முதல் குவைத், ஃகைத்தான் பகுதியில் அமைந்துள்ள மிக்தாத் பின் அம்ரு (ரழி) பள்ளிவாசலில் வாரந்தோறும் தமிழில் ஜும்ஆ குத்பாப் பேருரை நடத்தி வருகிறது.
வாரந்தோறும் குத்பாவுக்கு வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் வரக்கூடிய அனைவரும் மார்க்கத்தின் செய்திகளை முழுமையாக தெரிந்து கொள்வதற்காக ஜும்ஆ குத்பாப் பேருரையுடன் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் அச்சங்கம் நடத்தி வருகிறது.
வெள்ளிக்கிழமைகளின் பொன்னான நேரங்களை சமுதாய மக்கள் பயனடையும் முறையில் செலவழிக்க அச்சங்கம் பல்வேறு வகைகளில் முயற்சி செய்து வருகின்றது.
அந்த அடிப்படையில் வாரந்தோறும் ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு "வாரந்தோறும் வசந்தம்" என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ஒரு கேள்வி கேட்கப்படும். அடுத்து வரக்கூடிய வெள்ளிக்கிழமைக்குள் சரியான பதிலை நேரடியாகவோ அல்லது அலைபேசி வாயிலாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க வேண்டும். வாரந்தோறும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்(நபிமொழி)கள் உள்ளே புதைந்து கிடைக்கும் துஆக்கள், திக்ருகள், வரலாற்று நாயகர்கள் போன்றவற்றை பொதுமக்கள் தாங்களாகவே தோண்டியெடுக்கும் அற்புத நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.
கடந்த 30-ம் தேதி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி,
"குழந்தை பாக்கியம் கிடைக்க எந்த துஆவை / பிரார்த்தனையை ஓத வேண்டும் என்று திருக்குர்ஆன் குறிப்பிடும் வசனம் எது? அதை ஓதிய இறைத்தூதர் யார்?
7.10.2011 அன்று வெள்ளிக்கிழமை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட பதில்:
ரப்பி லா தர்னீ ஃபர்தன் வ அன்த்த் ஃஹைருல் வாரிஸீன் (அல்குர்ஆன் - அத்தியாயம்: அல் அன்பியா(21) - வசனம்: 89)
பொருள்: என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக ஆக்கிவிடாதே! நீயோ வாரிசாகக் கூடியவர்களில் மிக்க மேலானவன்.
இந்த துஆவை ஓதிய இறைத்தூதர்: ஹழ்ரத் ஜகரிய்யா(அலை) அவர்கள்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க:
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: [email protected] / [email protected]
யாஹு குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்: www.k-tic.com
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications