முதுகுளத்தூரில் டாக்டர் அப்துல் கலாம் பங்கேற்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பள்ளிக் கல்வித்துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் எம்.எஸ். நெய்னா முஹம்மது வரவேற்றார். பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.எம். காதர் முகைதீன் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
முதுகுளத்தூர் பேரூராட்சி உதவித் தலைவர் ஏ. ஷாஜஹான், அறிவியல் இயக்க உதவித் தலைவர் நவநீதகிருஷ்ணன், அரசு மேல்நிலைப்பள்ளி என்.சி.சி. அலுவலர் துரைப்பாண்டியன் ஆகியோர் அப்துல் கலாமுக்கு பொன்னாடை போர்த்தினர்.
பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி விழாக்குழுவினர் சார்பாக தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர் அப்துல் கலாமுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
விழாவில் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் சீனி முஹம்மது, கல்விக்குழுத் தலைவர் இக்பால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், வருவாய் கோட்ட அலுவலர், தாசில்தார் பிச்சை, பெரிய பள்ளிவாசல் துணைத்தலைவர் காதர் முகைதீன், உதவித் தலைமை ஆசிரியர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர், கடலாடி, கமுதி ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவ, மாணவிகள், ஊர் பொதுமக்கள், ஜமாஅத்தார்கள் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்துல் கலாம் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு புன்சிறுப்புடன் பதில் அளித்து அறிவுரை கூறி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி கல்விக்குழு மற்றும் விழாக்குழுவினர் சிறப்புறச் செய்திருந்தனர்.
தாய்நாட்டை நேசித்து பெண் குலத்தை மரியாதையோடு நடத்த உறுதி பூண வேண்டும். அறிவு தீபம் ஏற்றி இந்தியாவை சுடர்விடச் செய்ய வேண்டும் எனக்கூறி "அறிவுப் புதையல் தேடி பெருங்கடலில் அமைதித்தீவை தேடுகிறேன்" என்ற அப்துல் கலாம் கவிதை வரிகளுடன் விழா நிறைவுற்றது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications