மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக கருமுத்து கண்ணன் நியமனம்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக, தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கருமுத்து கண்ணனை தமிழக அரசு மீண்டும் நியமித்துள்ளது.
இந்தியாவிலேயே மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று மதுரை மீனாட்சியம்மன் கோவில்.
கடந்த 10 ஆண்டுகளாக இக் கோயில் தக்காராக பணியாற்றி வரும், தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கருமுத்து கண்ணன் கோயில் புனரமைப்பிற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தார்.
மேலும், கோயிலில் விரிசல் அடைந்த கற்களை மாற்றியும், கடந்த 2008 ம் வருடம் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற காரணமாகவும் இருந்தார்.
மீனாட்சி அம்மன் கோயிலில் குளிர்சாதன வசதி, தகவல் மையம், சுவாமி சன்னதியில் புதிய ஸ்படிகலிங்கம் பிரதிஷ்டை, தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில் உள்பட கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தவும் ஏற்பாடு செய்தார்.
புதிய அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் கருமுத்து கண்ணன் தலைமையிலான அறங்காவலர்கள் குழு ராஜினாமா செய்தது.
இந்த நிலையில், தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்காராக தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கருமுத்து கண்ணன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தக்கார், தியாகராஜர் மில்ஸ், கருமுத்து கண்ணன் , நியமனம்.












Click it and Unblock the Notifications