மலையாளத்துக்கு செம்மொழி அந்தஸ்து-அச்சுதானந்தன் கோரிக்கை

திருவனந்தபுரத்தில் 2007ம் ஆண்டுக்கான ஞானபீட விருது வழங்கும விழா நடைபெற்றது. மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குருப்புக்கு விருதை வழங்கி பேசிய பிரதமர்,
இந்திய மொழிக இலக்கியங்கள் அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை. எனினும் இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியது ஏளாரம் உள்ளது. இலக்கியப் படைப்புத் திறனாளிகளை உருவாக்குவதிலும், ஊக்குவிப்பதிலும் நாம் இன்னும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும்.
இந்தியாவின் ஆங்கில எழுத்தாளர்கள் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளனர். இது பாராட்டுக்குரியது. அதேபோல இந்திய மொழிப் படைப்பாளிகளும் சர்வதேச அளவில் பிரகாசிக்க வேண்டும். அதற்கான வாய்ப்பையும், தளத்தையும் மாநில அரசுகள் உருவாக்கித் தர வேண்டும். இலக்கியப் படைப்பாளிகளின் திறமையை அங்கீகரிப்பது அவசியம்.
இந்திய மொழிப் படைப்புகளின் தனிச் சிறப்பையும், மேன்மையையும் உலக மக்கள் அறிய வேண்டுமானால் அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். அதேபோல ஒரு இந்திய மொழியில் உள்ள படைப்புகளை மற்ற இந்திய மொழிகளுக்கும் மொழிப்பெயர்ப்பு செய்வது முக்கியம். இதன் மூலம் ஒரு மொழி படைப்புகளின் சிறப்பை மற்றொரு மொழியினர் அறிந்து கொள்ள இயலும் என்றார் மன்மோகன் சிங்.
விழாவில் பேசிய கேரள முதல்வர் அச்சுதானந்தன், மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும். தென்னிந்திய மொழிகளில் மலையாளத்துக்கு மட்டுமே செம்மொழி அந்தஸ்து இன்னும் அளிக்கப்படவில்லை. இதனால் செம்மொழி அந்தஸ்து கோரி ஏற்கெனவே பிரதமரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் பரிசீலித்து மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications