தனியார் வனப் பாதுகாப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு: சிபிஎம் எம்எல்ஏக்கள் குமரியில் பாதயாத்திரை
அருமனை: தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து குமரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 எம்எல்ஏக்கள் தலைமையில் பாதயாத்திரை தொடங்கியது.
குமரி மாவட்ட மக்களை பாதிக்கும் தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 நாட்கள் பாதயாத்திரை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று காலை குமரி மாவட்டத்தின் வெள்ளச்சிபாறை சந்திப்பில் ஜான்ஜோசப் எம்எல்ஏ தலைமையிலான பாதயாத்திரையை மாவட்டக் குழு உறுப்பினர் ராமசந்திரன் தொடங்கி வைத்தார்.
பாதயாத்திரை குழு தனிச்சமூடு, சிதறால், அம்பலக்கடை வழியாக நேற்று இரவு அருமனை சந்திப்பை அடைந்தது. தொடர்ந்து இன்று காலை அருகாணியில் இருந்து புறப்பட்டு பத்துகாணி, மருதம்பாறை, ஆலஞ்சோலை, கடையல், கட்டான்விளை, செங்குழிகரை வழியாக களியல் சந்திப்பில் பாதயாத்திரை நிறைவடைகிறது.
மாநில செயற்குழு உறுப்பினர் நூர்முகமது யாத்திரையை முடித்து வைக்கிறார். இதேபோல் திற்பரப்பில் இருந்து லீ்மாரோஸ் தலைமையில் பாதயாத்திரை புறப்பட்டது. இதை மாவட்ட செயலாளர் முருகேசன் தொடங்கி வைத்தார். இக்குழுவினர் குலசேகரம், பொன்மனை, ஆயக்கோடு, கல்லடி மாமூடு வழியாக நேற்று மாலை திருவட்டாரில் பாதயாத்திரையை நிறைவு செய்தனர்.
தொடர்ந்து இன்று ஆத்தூர் சந்திப்பில் தொடங்கி வேர்கிளம்பி, சித்தரங்கோடு, குமாரபுரம், மேக்காமண்டபம் வழியாக தக்கலையில் நிறைவடைகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications