அன்னதானத்தின் மகிமையை அறிந்து கொள்வோம்
“தானங்கள் பலவற்றில் சிறந்தது அன்னதானம்
தானத்தை செய்வோர்தான் பெறுவோர் பேரனைத்தும்
தக்கபேறு தக்கநேரம் தான் வந்து காப்பளிக்கும்
தற்காப்பு இதுவன்றி தான் வேறு இல்லை சொல்ல "
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான்
கிருஷ்ணபகவானும் கீதையில், “ எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக்
கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு
எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்".
போதும் என்ற மனம்
அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு,
வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும்
வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல
மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும்.
என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும், அவனால் ஒரு அளவிற்கு மேல் சாப்பிட
முடியாது.
அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. – அது விரதம். அன்னத்தை மிகுதியாக உண்டாக்க
வேண்டும். – அது விரதம். அன்னத்தை வேண்டி வந்த எவரையும் தள்ளிவிடக் கூடாது. –
ஆகையால் எவ்விதத்திலாவது மிகுதியாக அன்னத்தை தேடிக் கொள்ள வேண்டும்.
வருபவர்களுக்கு அன்னம் தயாராக இருக்கிறதென்று சொல்லுவர் பெரியோர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான். பசியற்ற
பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். இங்கு வாழும்
மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம்.
அட்சய பாத்திரம்
உயிரோடு உடம்பை சேர்த்து வைத்து ரட்சிப்பதும் அன்னம்தான். அதனால்தான் 'உண்டி
கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே" என்று சொல்லியிருக்கிறது.
மணிமேகலையில் இப்படி அன்னதானத்தின் பெருமை கூறப்பட்டுள்ளது. மணிமேகலைக்கு
காஞ்சியில் அட்சய பாத்திரம் கிடைத்தது. அவள் அதை வைத்துக்கொண்டு சகல ஜனங்களின்
பசிப்பிணியை போக்கினாள்.
இதற்கு அநேக யுகங்கள் முன்பே காஞ்சிபுரத்தில் அம்பாளும், இதே அன்னதானத்தை
செய்திருக்கிறாள். ஜகன்மாதா இங்கே, “ இரு நாழி நெல் கொண்டு எண் நான்கு அறம்
இயற்றினார்." என்று சொல்லியிருக்கிறது. இங்கே அன்னபூரணிக்கு தனி சன்னதி
இருக்கிறது. திருவையாற்றிலும்அம்பாள், தர்மசம்வர்த்தினியாக, “ அறம் வளர்த்த
நாயகியாக " காட்சி தருகிறாள். உலக மக்களின் பசிப் பிணியைப் போக்க
பராசக்தி அன்னபூரணியாக அவதரித்து காசியில் அருள் புரிந்து கொண்டிருக்கும்
அன்னபூரணியை தினமும் வணங்கினால் என்றைக்கும் உணவிற்கு குறைவு வராது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications