சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நாட்டியாஞ்சலி விழா

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி தினத்தன்று நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா தொடங்கும். 5 நாள் நடைபெறும் இந்த நிழ்ச்சியில் உலகெங்கிலுமிருந்து பல்வேறு கலைஞர்கள் கலந்து கொண்டு நடராஜர் சன்னதியில் நடனமாடி தங்களது பக்தியை வெளிப்படுத்துவர்.
இன்று மாலை 5.30 மணிக்கு 30வது நாட்டியாஞ்சலி விழா தொடங்குகிறது. கிருஷ்ணசாமி தீட்சிதர் தலைமை தாங்குகிறார். டெல்லி சங்கீதா நாடக அகாடமி தலைவர் லீலா சாம்சன் தொடங்கி வைக்கிறார்.
5.45 மணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் பரதம், 6.10 மணிக்கு சென்னை திவ்யா சங்கர் பரதம், 6.35 மணிக்கு மும்பை சரபோஜி ராஜே போஸ்லே மையம் மாணவ மாணவிகள் பரதம், 7.10 மணிக்கு பரதசூடாமணி நடனப்பள்ளி மாணவிகள் பரதம் நடக்கிறது.
இரவு 8.15 மணிக்கு புகழ் பெற்ற பரத கலைஞர் பத்மா சுப்பிரமணியம் பரதநாட்டியம் நடக்கிறது. அதையடுத்து சென்னை காயத்ரி பாலகுருநாதன் நாட்டிய நாடகம், சென்னை கனகசபை நடனப்பள்ளி மாணவ மாணவிகள் திருவாசகம் நாட்டிய நாடகம், டாக்டர் ராகவன் நிகழ்கலைகள் மைய மாணவர்களின் பரதம், நிருத்ய சங்கமம் ஆடல் கலைஞர்கள் பரதம், மோகினி ஆட்டம், ஒடிஸி, கதகளி, குச்சிப்புடி, கதக், மணிபுரி, சத்ரீயா ஆகிய நாட்டியங்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன.
நாட்டியாஞ்சலி விழாவையொட்டி சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications