மார்ச் 2ல் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி விழா துவக்கம்
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் 30வது நாட்டியாஞ்சலி விழா வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி துவங்குகிறது.
சிதம்பரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் சிவாராத்திரியையொட்டி நாட்டியாஞ்சி விழா நடத்தப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்கள் நடக்கும் இந்த நாட்டியாஞ்சலி விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலமான பரத, கதக், ஒடிசி, குச்சிப்புடி நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் நாட்டியத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பர்.
இந்தியா தவிர்த்து அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல்வேறு நாட்டில் உள்ள பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டு நடன அஞ்சலி செலுத்துவர்.
இந்த ஆண்டு 30-வது நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியான மார்ச் மாதம் 2-ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் நாட்டியாஞ்சலி விழா துவங்குகிறது. இதற்கு கிருஷ்ணசாமி தீட்சிதர் தலைமை தாங்குகிறார். விழாவை புதுடெல்லி சங்கீத நாடக அகாடமி தலைவர் லீலா சாம்சன் தொடங்கி வைக்கிறார். இதில் நெய்வேலி என்.எல்.சி. சேர்மன் அன்சாரி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக 5.45 மணிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக மாணவிகள் பரதம், 6.10 மணிக்கு சென்னை திவ்யா சங்கர் பரதம், 6.35 மணிக்கு மும்பை சரபோஜி ராஜே போஸ்லே மையம் மாணவ மாணவிகள் பரதம், 7.10 மணிக்கு பரதசூடாமணி நடனப்பள்ளி மாணவிகள் பரதம் நடக்கிறது.
தொடர்ந்து 8.15 மணிக்கு புகழ் பெற்ற பரத கலைஞர் பத்மா சுப்பிரமணியம் பரதநாட்டியம் நடக்கிறது. அதையடுத்து சென்னை காயத்ரி பாலகுருநாதன் நாட்டிய நாடகம், சென்னை கனகசபை நடனப்பள்ளி மாணவ மாணவிகள் திருவாசகம் நாட்டிய நாடகம், டாக்டர் ராகவன் நிகழ்கலைகள் மைய மாணவர்களின் பரதம், நிருத்ய சங்கமம் ஆடல் கலைஞர்கள் பரதம், மோகினி ஆட்டம், ஒடிஸி, கதகளி, குச்சிப்புடி, கதக், மணிபுரி, சத்ரீயா ஆகிய நாட்டியங்கள் ஒரே நேரத்தில் நடக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications