கரூர் சித்தருக்கு சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் சிறப்பு வைபவம்
நெல்லை: கரூர் சித்தருக்கு நெல்லையப்பர், காந்திமதி அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் இன்று நடந்தது.
கடும் தவத்தினால் கரூர் சித்தருக்கு எட்டு வகை சித்திகள் கிடைத்தன. சித்திகள் பெற்ற கரூர் சித்தர் சிவ தல யாத்திரை மேற்கொள்கிறார். ஈசனை அழைத்த உடன் அவர் காட்சி கொடுக்க வேண்டும் என்ற சித்தியும் பெற்றார். நெல்லை வந்த கரூர் சித்தர் நெல்லையப்பரை அழைத்தார். கரூர் சித்தருக்கு நெல்லையப்பர் பதில் அளிக்கவில்லை. இதனால் கோபமுற்ற கரூர் சித்தர் ஈசன் இங்கு இல்லை. எருக்கும், குறுக்கும் இங்கு எழுக என்று சாபமிட்டு மானூர் நோக்கி நடந்தார்.
சுவாமி நெல்லையப்பர் சிவதொண்டராக வந்து கரூர் சித்தரை அழைத்தார். சற்று கோபம் தணிந்த சித்தர், மானூர் வந்து காட்சி தந்து சாபவிமோசனம் பெறலாம் என ஈசனிடம் கூறி நடந்தார். இதையடுத்து நெல்லையப்பரும், காந்திமதி அம்பாளும் மானூர் சென்று கரூர் சித்தருக்கு ஜோதிமயமாக காட்சி அளித்தனர். தொடர்ந்து கரூர் சித்தரை உடன் நெல்லைக்கு அழைத்து வந்தார்கள். நெல்லை வந்ததும், இங்கு ஈசன் உள்ளார். எருக்கும், குறுக்கும் அறுக என கூறி சுவாமிக்கு சாப விமோசனம் வழங்கினார்.
இந்நிகழ்வுகளை போற்றும் வகையில் ஆண்டு தோறும் நெல்லையப்பர் கோயிலில் ஆவணி மூலத்திருநாள் விழாவாக 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆவணி மூலத்திருநாள் விழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிலிருந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
கடந்த 4-ம் தேதி இரவு 9 மணியளவில் நெல்லையப்பர் கோயிலில் இருந்து கரூர் சித்தர் எழுந்தருளி நான்கு ரதவீதிகளிலும் உலா வந்தார். பின்னர் சங்கரன்கோவில் ரோடு வழியாக ராமையன்பட்டி, ரஸ்தா வழியாக மானூர் அம்பலவாண சுவாமி கோயிலுக்கு நேற்று காலை சென்றார். அங்கு கரூர் சித்தருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
நேற்றிரவு நெல்லையப்பர் கோயிலில் இருந்து சந்திரசேகரர், பவாணி அம்பாள், பாண்டியராஜா, சண்டிகேஸ்வரர், தாமிரபரணி, அகஸ்தியர், குங்குலியகலிய நாயனார் ஆகிய மூர்த்திகள் பல்லக்கிலும், சப்பரத்திலும் நான்கு ரதவீதிகளிலும் வீதிஉலா நடந்தது. பின்னர் ராமையன்பட்டி, ரஸ்தா வழியாக மானூருக்கு சென்றனர்.
இன்று காலையில் மானூர் அம்பலவாண சுவாமி கோயிலில் கரூர் சித்தருக்கு, சுவாமி நெல்லையப்பரும், அம்பாளும் காட்சி கொடுக்கும் சிறப்பு வைபவ நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆவணி மூலம் மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. இதையடுத்து கரூர் சித்தர் நெல்லைக்கு அழைத்து வரப்படுகிறார். இங்கு நெல்லையப்பர் கோயிலில் "சாபவிமோசனம்' நிவர்த்தி செய்து வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications