திருப்பூரில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் இருந்தவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி உண்ணாவிரதம் இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி அணைப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் குணசேகரன் (39). இவர் திருப்பூர் மக்கள் முயற்சி என்ற அமைப்பை நடத்தி வருகின்றார்.
கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக பல கோடி ரூபாயில் பள்ளிப்புத்தங்கள் எல்லாம் கூட தயாராக இருந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்கு வந்தது. இதனையடுத்து சமச்சீர் கல்வி திட்டத்தை தற்காலிமாக நிறுத்தி வைத்தது. இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி குணசேகரன் நேற்று குமரன் சிலை முன்பு உண்ணாவிரதம் இருந்தார்.
உண்ணாவிரதத்திற்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி பெற்ற நிலையில், மாலை நேரத்தை தாண்டியும் அவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். இதனால் அவர் மீது திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications