அதிகாரிகள் மாற்றம் எதிரோலி: தகவல் தெரிவிப்பதில் உளவு பிரிவுக்கு சிக்கல்
நெல்லை: போலீஸ் உயர் அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டதன் எதிரொலியாக உளவு பிரிவு போலீசார் தாங்கள் சேகரித்த தகவல்களை தெரிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், சமூக விரோத செயல்களை கண்டறி்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதிலும் உளவு துறை போலீசாரி்ன் பங்கு மு்க்கியமானது. மதம், அரசியல், சாதி கட்சிகள் என அனைத்திற்கும் தனித் தனி பிரிவு போலீசார் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
எஸ்ஐ, இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ள இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவல்களை அதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் உளவு பிரிவு உதவி கமிஷனர், துணை கமிஷனர், கமிஷனர், டிஐஜி, ஐஜி, டிஜிபி, உள்துறைக்கு தெரிவிப்பார்கள். இவர்கள் கொடுக்கும் ரகசிய தகலவின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படு்ம். இதன் மூலம் அசம்பாவிதங்கள் தடுக்கப்படும்.
தமிழகத்தில் ஐஎஸ்எஸ்பிசிஐடி, கியூ பிரிவு உள்பட 5 வகையான உளவு பிரிவு போலீசார் உள்ளனர். இவர்கள் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் சம்பவங்களை உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தெரிவிப்பார்கள். காலை 6 மணி, மதியம் 1 மணி, இரவு 8 மணிக்கு தினமும் தொலைபேசி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் தெரிவிப்பார்கள். சீருடை அணியாமல் மக்களோடு மக்களாக கலந்திருக்கும் உளவு பிரிவு போலீசாரை எளிதில் அடையாளம் கண்டு பிடிக்க முடியாது. இதுவே அவர்களது பலம்.
தற்போது தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. அதை தொடர்நது போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணி இடத்திற்கு சென்றுவிட்டனர்.
இன்னும் சிலர் புதிய பணியில் சேர்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியின் செல்போன் எண்கள் சில உளவு பிரிவு போலீசாருக்கு தெரிவதில்லை. சில அதிகாரிகள் பணி்க்கு திரும்பவில்லை. இதனால் தகவல் தெரிவிப்பதில் உளவு பிரிவு போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கல் நீடிக்கக் கூடாது என்றும், நீடிப்பது ஓட்டு மொத்த காவல் பணிக்கு இடையூறு ஏற்படுத்திவிடும் என்றும் உளவு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications