விஷு திருவிழா: 10-ம் தேதி சபரி்மலை நடை திறப்பு
திருவனந்தபுரம்: சித்திரை விஷூ திருவிழாவையொட்டி வரும் 10-ம் தேதி சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு கால பூஜைகளுக்கு அடுத்தபடியாக சித்திரை விஷூ திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு சித்திரை விஷூ கொண்டாடத்திற்காக சபரிமலை கோயில் நடை வரும் 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும். 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சகஸ்ரகலச பூஜை, 13, 18 ஆகிய தேதிகளில் களபாபிஷேகம் நடைபெறும். வரும் 15-ம் தேதி சித்திரை விஷூ கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணி முதல் விஷூக்கனி தரிசனம் நடைபெறும். அதிகாலை முதல் பக்தர்களுக்கு தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் பூஜை செய்யப்பட்ட நாணயங்களை கைநீட்டமாக அளிப்பார்கள்.
இதை பெறுவதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தவிர சன்னிதானத்தில் தனி கவுன்டர்கள் மூலமும் நாணயங்கள் வினியோகிக்கப்படும். வரும் 18-ம் தேதி இரவு கோயில் நடை சாத்தப்படும். விஷூ விழாவை முன்னிட்டு வரும் 10-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications