சமையல் எண்ணெயிலும் ஷேவிங் செய்யலாம்-நெல்லை பேராசிரியரின் கண்டுபிடிப்பு
நெல்லை: அன்றாடம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய், மற்றும் சம அளவு தண்ணீர் இருந்தாலே போதும் ஷேவிங் கீரிம் இல்லாமலேயே ஷேவிங் பண்ணலாம். இதனால் நரை முடியை கட்டுபடுத்த முடியும் என நெல்லை பல்கலை பேராசிரியர் கண்ணன் தெரிவித்தார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வேதியியல் துறை பேராசிரியர் கண்ணன் நெல்லையில் நிருபர்களிடம் பேசுகையில்,
ஆண்கள் முகத்தில் ஷேவிங் பண்ணுவதற்கு கீரிம் மற்றும் நோய் தடுப்பு திரவத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் உள்ள வேதிப்பொருட்களால் இளமையிலேயே முகத்தில் உள்ள முடி நரைக்க துவங்கி விடும்.
வியர்வை வெளியேற்றம் தடைபடுவதால் உடல் வெப்பம் அதிகரிக்கும். தூக்கமின்மை, கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். ஷேவிங் கீரிமை உபயோகிக்கப்படுத்துவதால் அதில் உள்ள வேதிப் பொருட்கள் உணவு குழாய், பித்தப்பை, சிறுநீர் பை ஆகியவற்றில் புற்று நோயை உண்டாக்கும். நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். தோலில் பாதிப்பு ஏற்படும்.
நம் அன்றாடம் பயன்படுத்தும் தாவர எண்ணெயும், சம அளவு தண்ணீரையும் சேர்ந்து கலவையை கீரிமாக பயன்படுத்தலாம். இந்த கலவை உராய்வு நீக்கியாக பயன்படுத்தலாம். இவை முகத்தில் உள்ள தசைகளுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்த திரவத்துக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளதால் முக சவரத்துக்கு பின் நோய் தடுப்பு திரவத்தை பயன்படுத்த தேவையில்லை. மேலும் இந்த கலவையை பயன்படுத்தி சேவிங் செய்தால் பிளேடின் செயல்திறனும் அதிகரிக்கும். பொருளாதார வகையிலும் இது மலிவானது.
இதனை உபயோகிப்பதின் மூலம் இளநரை கூட கருமையாக மாறும். இயற்கையான சேவிங் கீரிம் செய்வது மிகவும் எளிது.
தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், போன்ற ஏதாவது ஓரு எண்ணெய்யையும், சம அளவு தண்ணீரையும் கலக்க வேண்டும். முகத்தில் சவரம் செய்ய வேண்டிய இடத்தில் இந்த எண்ணெய்யை தேய்க வேண்டும். சிறிது நேரம் கழித்து சேவிங் செய்யலாம். இந்த கலவையை பயன்படுத்துவதால் சுற்று சூழல் பாதிக்காது என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications