துபாயில் நடந்த வானலை வளர்தமிழின் கவியரங்கம், சிறப்பிதழ் வெளியீட்டு விழா

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈமான் அமைப்பின் துணைத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான் அவர்களும், ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளரும், காயிதே மில்லத் பேரவைத் தலைவருமான குற்றாலம் ஏ. லியாகத் அலி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
செல்வி ஆனிஷா ஜியாவின் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, அமைப்பின் வரவேற்புக் குழுச் செயலாளர் கிளியனூர் இஸ்மத் அவர்களின் வரவேற்புரையுடன் விழா இனிதே துவங்கியது.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களை கவுரவிக்கும் விதமாக அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு சிவஸ்டார் உணவகத்தின் உரிமையாளர் பொன்னாடை போர்த்த, சிறுகதை எழுத்தாளர் சேக் சிந்தாமதார் நினைவுப் பரிசை வழங்கினார். மேலும் லியாகத் அலி அவர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் தஞ்சாவூரான் பாருக் பொன்னாடை போர்த்த, செயலாளர் சிம்மபாரதி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக கலங்கரை விளக்கம் இதழ் வெளியீட்டில் முதல் ஐந்து பிரதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான், லியாகத் அலி, ஆசிப் மீரான், ஸ்ரீவாணி ஆனந்தன் மற்றும் எஸ்.எம். பாரூக் ஆகியோர் வெளியிட முறையே கோவிந்த், பதிவர் சரவணன் ( குசும்பன்), ஊமையன் ஹக்கிம், திருமதி. முத்துக்குமார், பட்டினம் மணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
கோவிந்தராஜன் மற்றும் லியாகத் அலி அவர்களின் சிற்றுரையைத் தொடர்ந்து அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆற்றிய சிறப்புரையில் சாதி, மதம் கடந்த சகோதரத்துவத்தை வலியுறுத்தி பேசினார். நாடாளுமன்ற வார விடுமுறையின் மத்தியில் அமீரகம் வந்து இங்குள்ள உறவுகளை சந்திப்பதின் சந்தோஷத்தை அவையினருடன் பகிர்ந்து கொண்டார்.
பின்னர் கவியரங்கு நிகழ்ச்சியை நர்கீஸ் ஜியா மற்றும் தஞ்சாவூரான் பாரூக் இணைந்து நடத்த கவிஞர்கள் நிவேதிதா ஆனந்தன், சிம்மபாரதி, சந்திரசேகர், ஜியாவுதீன், சிறுமி ஆனிஷா ஜியா, துரை மலைவேல், ஜெயராமன் ஆனந்தி, குறிஞ்சி தாசன் சலீம், நர்கீஸ் ஜியா மற்றும் தஞ்சாவூரான் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதே நிறைவுற்றது.
விழாவின் மத்தியில் வேலை மாற்றம் கிடைத்து இந்தியா செல்லும் துரைமலைவேலுவை கௌரவிக்கும் வண்ணம் அமைப்பு சார்பில் தலைவர் கோவிந்தராஜன் பொன்னாடை போர்த்த, பொருளாளர் ஆனந்தன் நினைவுப் பரிசை வழங்கினார். அதேபோல் தாயகம் திரும்பும் கீபோர்ட் புகழ் ஸ்ரீவித்யாவை நர்கீஸ் ஜியா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இறுதியாக அமைப்பின் துணைச் செயலாளர் முகவை முகில் நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காவிரிமைந்தன், தஞ்சாவூரான், ஆனந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி மற்றும் கீழை ராஸா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆசிப் மீரான், பட்டினம் மணி, முத்துக்குமார், நண்பன் சாஜி, திருவிடச்சேரி எஸ்.எம். ஃபாரூக், ஏ. முஹம்மது தாஹா, முத்தமிழ் வளவன் மற்றும் முதுவை ஹிதாயத் உட்பட பல அமைப்பின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications