துபாயில் வானலை வளர்தமிழின் கவியரங்கம், சிறப்பிதழ் வெளியீட்டு விழா

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் கோவை நந்தக்குமார் மற்றும் திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்க, அமைப்பின் ஆலோசகர் காவிரிமைந்தன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடந்து சிறப்பு விருந்தினர்கள் வழக்கறிஞர் கோவை நந்தக்குமார், திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீனுக்கு அமைப்பின் சார்பில் கீழை ராஸா மற்றும் புதுவை ரமணி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
தொடர்ந்து "ஏன்" இதழ் வெளியீட்டில் பிரதிகளை வழக்கறிஞர் நந்தக்குமார் வெளியிட முறையே ஜமால் முஹ்யித்தீன், ஃபாரூக், காதர் முகைதீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.வாழ்த்துரை வழங்கிய ஜமால் முஹ்யித்தீன் அவர்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து வியந்ததுடன் தானும் இதில் இணைந்து செயலாற்ற தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் நந்தக்குமார், அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பாராட்டியதுடன், வெளிநாடு வாழ் மக்களுக்காக சென்னையில் தான் ஆரம்பித்துள்ள இலவச வழிகாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
அடுத்து முதுவை ஹிதாயத் அவர்களின் சிற்றுரையைத் தொடர்ந்து நடந்த கவியரங்கை கவிஞர் ஜியாவுதீன் பொறுப்பேற்று நடத்த, கவிஞர்கள் ஜெயராமன் ஆனந்தி, ஜெயா பழனி, சந்திரசேகர், காவிரிமைந்தன், காதர் முகைதீன், நர்கீஸ் ஜியா மற்றும் ஜியாவுதீன் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதே நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியை காவிரிமைந்தன் தொகுத்து வழங்கினார். தஞ்சாவூரான், காவிரிமைந்தன், சிம்மபாரதி மற்றும் ஜியாவுதீன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications