எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது

Subscribe to Oneindia Tamil

மதுரை: கனடாவில் உள்ள தமிழ் இலக்கியத் தோட்டத்தின் சார்பில் பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு 2011ம் ஆண்டுக்கான இயல் விருது வழங்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் எஸ்.ராமகிருஷ்ணன்(46). பிரபல எழுத்தாளர். பாண்டவம், நெடுங்குருதி, துயில், யாமம் உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். மேலும் அவர் திரைப்படங்களுக்கு வசனமும் எழுதி வருகின்றார்.

இந்த நிலையில் இவரது வாழ்நாள் இலக்கிய சாதனைகளை பாராட்டி, கனடாவில் உள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் சார்பில் 2011ம் ஆண்டுக்கான இயல் விருது வழங்கப்படுகின்றது. இயல் விருது உடன் ரூ.75,000 ரொக்க பரிசும் வழங்கப்படுகின்றது.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஏற்கனவே தாகூர் இலக்கிய விருது, தமிழக அரசு விருது, சிகேகே இலக்கிய விருது, ஞானவாணி விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சிறந்த நாவல் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த விருது பெறுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், விருதுகள் தமது படைப்புகளுக்கு அங்கீகாரம் அளிப்பதாக உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+