சங்கரநாராயணசாமி கோவிலில் இன்று ஆரூத்ரா தரிசனம்

Subscribe to Oneindia Tamil

Sankarankovil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் திருவாதிரை திருவிழாவையொட்டி இன்று நடராஜரின் ஆரூத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி சங்கரலிங்க சாமி சன்னதியில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், அலங்கார, தீபாராதனைகளும், தந்தபல்லாக்கில் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடக்கிறது.

விழாவில் 63 நாயன்மார்களுக்கும் சுவாமி அம்பாள் காட்சி கொடுத்த நிகழ்ச்சியும், கடந்த 5ம் தேதி நடராஜருக்கு வெள்ளை சாததியும், இரவில் சிவப்பு தாத்தியும், 6ம் தேதி பச்சை சாத்தியும் வீதி உலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நாளான (8ம் நாள்)இன்று நடராஜரின் ஆரூத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கோ பூஜையும், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரகத்தில் நடராஜர் எழுநதருளி கோயில் முன்மண்டபம் மற்றும் நான்கு ரத வீதிகளில் நடராஜர் ருத்ரஸ தாண்டவம் ஆடும் ஆரூத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை விழா கமி்ட்டியினர் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+