துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கம் நடத்திய பொங்குது பொங்கல் நிகழ்ச்சி
சங்கத்தின் தலைவி மீனாகுமாரி பத்மநாதன் வரவேற்புரையாற்றினார். குழந்தைகளின் மழலையில் வெளிவந்த பொய் சொல்லக் கூடாது, இனிய சொற்களையே பேச வேண்டும், நட்பினை விட சிறப்பு வேறில்லை போன்ற கருத்தடங்கிய குறள்சொல்லும் நேரம், நான் யார் தெரியுமா நிகழ்ச்சியில் குடியரசு தினத்தை நினைவு கூறும் விதமாக குழந்தைகள் வ.உ.சிதம்பரனார், சுப்ரமணிய சிவா, பாரதியார், கொடிகாத்த குமரன் ஆகியோர் போன்று உடைகள் அணிந்து பேசிய வீரமிக்க வசனங்களில் கூடியிருந்தோர் மெய்சிலிர்த்துப் போயினர். வடிவமைத்த பாராட்டுக்குரியவர் ராஜி முரளி.
குழந்தைகள் நிலம் உழுவதிலிருந்து, பயிர் வீடு வந்து சேர்வது வரை உள்ள படிநிலைகளை அறுவடை நடனமாக ஆடிக் காட்டி எப்படிப்பட்ட இயந்திரமயமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிட்டனர். இந்நடனத்தை வடிவமைத்துக் கொடுத்தவர் பத்மபிரியா பிரகாஷ்.
சிறுபிள்ளைகள் ஆடிய பொங்கல் குறித்த நடனம் பார்வையாளர்களை தாளம் போட வைத்ததோடு எழுந்து ஆடத்தூண்டுவதாகவும் அமைந்த விதத்தில் நடனத்தை வடிவமைத்து இருந்தவர் ஸ்ரீ ரங்கநாச்சியார் அசோக்குமார். இருநடனங்களையும் சிறந்த முறையில் வெளிக்கொண்டு வர உதவியவர் சாரதா ஹரி.
ராதிகா ஆனந்த் வடிவமைத்திருந்த மியூசிக் மெலடி இசையின் பல பரிமாணங்களை இனம் பிரித்து இசைக்கருவிகள் வழியாகவும், பாடல்கள் வழியாகவும், தமிழில் ஆரம்பித்து, இந்துஸ்தானி தொட்டு, மேற்கத்திய இசையில் முடித்த இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை பரசவப்படுத்தியது.
"குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவியின் முழுமையான நம்பிக்கைக்கு " உரியவர்களே", " இல்லையே" என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு 36 ஆண்டுகளாக தமிழ் பேராசிரியராக இருந்த பொன் முத்தையன் நடுவராக இருந்தார். உரியவர்களே என்று ஆண்களும், இல்லையே என்று பெண்களும் அதிரடியாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 'உரியவர்களே' என்பதற்கான ஆதாரங்களை விட ' இல்லையே' என்பதற்கான ஆதாரங்களே அதிகப்படியாக இருக்கின்றது. எனவே குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவியின் முழுமையான நம்பிக்கைக்கு உரியவர்கள் ' இல்லை' என நடுவர் தீர்ப்பு வழங்கினார்.
ஸ்பார்க் மஹாலர்னிங் (SPARK Mahalearning) குறித்து அனு அசோக் உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. சாரதா ஹரியின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?













Click it and Unblock the Notifications